Bigg Boss Tamil Season 8: கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி.. வந்தாச்சு பிக்பாஸ் சீசன் 8..! - Tamil News | Actor vijay sethupathi host biggboss season 8 in tamil | TV9 Tamil

Bigg Boss Tamil Season 8: கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி.. வந்தாச்சு பிக்பாஸ் சீசன் 8..!

Updated On: 

04 Oct 2024 09:00 AM

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7  சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் முறையாக சின்னத்திரையில் நடிகர் கமல்ஹாசன் தோன்ற போகிறார் என்று அறிவிப்பு வெளியான போதே பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்நிகழ்ச்சி புதுமையானதாக இருந்ததால் ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவளித்தனர்.

Bigg Boss Tamil Season 8: கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி.. வந்தாச்சு பிக்பாஸ் சீசன் 8..!

கோப்பு புகைப்படம்

Follow Us On

பிக்பாஸ் சீசன் 8: சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸின் சீசன் 8ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படியான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7  சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் முறையாக சின்னத்திரையில் நடிகர் கமல்ஹாசன் தோன்ற போகிறார் என்று அறிவிப்பு வெளியான போதே பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்நிகழ்ச்சி புதுமையானதாக இருந்ததால் ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவளித்தனர்.

தொடர்ந்து 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து  வழங்குவதில் இருந்து இடைவெளி எடுக்க உள்ளதாக அறிவித்தார். இதனால் புதிதாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இப்படியான நிலையில் கொரோனா காலகட்டத்தின் போது கமல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். அதேபோல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதனை முதலில் கமல் தொகுத்து வழங்கிய நிலையில் விக்ரம் படம் ஷூட்டிங்கிற்காக செல்ல வேண்டி இருந்ததால் விலகினார். பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சிலம்பரசன் தொகுப்பு வழங்கியிருந்தார்.

இப்படியான நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அதற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் செம ஸ்டைலாக அவர் தோன்ற, பிக்பாஸ் நிகழ்ச்சி லோகோவும் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version