5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vijay Sethupathi: விலகிய கமல்.. உள்ளே வரும் விஜய்சேதுபதி.. களைகட்டும் பிக்பாஸ்!

Bigg Boss Tamil season 8: பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே அக்டோபர் மாதம் 8வது சீசன் தொடங்கவிருப்பதாக சொல்லப்படும் நிலையில், சில தினங்களுக்கு தன்னால் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாது என அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் கமல்ஹாசன்.

Vijay Sethupathi: விலகிய கமல்.. உள்ளே வரும் விஜய்சேதுபதி.. களைகட்டும் பிக்பாஸ்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 04 Oct 2024 09:00 AM

பிக்பாஸ் நிகழ்ச்சி: சின்னத்திரையில் ரசிகர்களிடையே மிகப்பிரபலமான நிகழ்ச்சியாக திகழ்ந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே அக்டோபர் மாதம் 8வது சீசன் தொடங்கவிருப்பதாக சொல்லப்படும் நிலையில், சில தினங்களுக்கு தன்னால் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாது என அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் கமல்ஹாசன். அவரால் தான் அந்த 7 சீசன்களும் மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படியிருக்கையில் கமல்ஹாசன் விலகியதால் அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார், அல்லது அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு நிறுத்தப்படுமா என்றெல்லாம் கேள்வி எழுந்தது.

Also Read: The Greatest Of All Time: விஜய்யின் கோட் படத்தின் கதை இதுதான் – போட்டுடைத்த வெங்கட்பிரபு..!

இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்ததாக தொகுத்து வழங்கப்போகும் பிரபலம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகி ப்ரோமோ ஷூட்டுகள் தொடங்கும் என கூறப்படுகிறது. வழக்கம்போல இந்த நிகழ்வை புதிதாக தொகுத்து வழங்குபவரை நடிகர் கமல்ஹாசனே அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என்பது புதிதல்ல. ஏற்கனவே சன் டிவியில் 2019 ஆம் ஆண்டு நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியையும், அதன்பிறகு மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பல ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார். இப்படியிருக்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கவுள்ளது கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Dream Theory: கனவில் காதலி வந்தால் இதுதான் அர்த்தமா? – எச்சரிக்கையா இருங்க!

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு வார நிகழ்ச்சிகளை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இதேபோல் 2021 ஆம் ஆண்டு பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாக ஓடும் ஒளிபரப்பு நிகழ்ச்சி வெளியானது. முதலில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதாக இருந்தது. ஆனால் விக்ரம் படத்தில் நடித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கமல் விலகினார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை யாரும் எதிர்பாராத நிலையில் நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற விவாதத்தில் ரம்யா கிருஷ்ணன், சிலம்பரசன் பெயர்களும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News