5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: காலேஜ் டூரில் நடந்த கலவரம்… விஜய் சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ

Actor Vijay: நடிகர் விஜய் படப்பிடிப்புத் தளத்தில் தனது செல்போனை உபயோகிக்கமாட்டார், அதற்குப் பதிலாக படப்பிடிப்புத்தளத்தில் நடப்பதை அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பார் என அவருடன் நடித்த துணை நடிகர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, காவலன், வேலாயுதம் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெறாத போது விஜய் சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என பேச்சுக்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து வெளிவந்த நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. அதுவரை இளைய தளபதி விஜய் என அழைத்து வந்த ரசிகர்கள், பிறகு தளபதி என அழைக்க தொடங்கினர். 

Cinema Rewind: காலேஜ் டூரில் நடந்த கலவரம்… விஜய் சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ
விஜய்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 01 Jul 2024 16:19 PM

விஜய் : நடிகர் விஜய்காந்தின் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் விஜய். தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்குநராக இருந்தாலும், தனது சொந்த நடிப்புத் திறமையால் திரையுலகில் வெற்றியடைந்தவர் விஜய். 1992ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய். படத்தை பார்த்த பலரும் விஜய்யின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தனர். இயக்குநரின் மகன் என்பதால் சுலபமாக ஹீரோவாகி விட்டார் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் வாரிசாக இருந்தால் வாய்ப்பு மட்டுமே கிடைக்கும் திறமையும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு விஜய் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறலாம். சினிமாவில் மட்டும் அல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் தன்னை ஏழனமாக பேசியவர்களின் முன்னிலையில் தளபதியாக தனது தரத்தை உயர்த்திக் காட்டினார் விஜய்.

தனது முதல் படம் மக்களிடையே வரவேற்பைப் பெறாவிட்டாலும், தொடர்ந்து அவருக்கான வாய்ப்பு திரைத்துறையில் இருந்தது. 20 வயதிலேயே ரசிகர்களின் மனத்தில் இடம் பதித்த விஜய்க்கு, 1994 ஆம் ஆண்டு வெளியான ’ரசிகன்’ படத்திலேயே ‘இளைய தளபதி’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அடிப்படையில் ‘விஜய்’ ஒரு மாஸ் நடிகர் என்ற பிம்பம் அவரைச்சுற்றி எழுப்பப்ப்பட்டாலும், அவரை அனைவருக்குமான ஜனரஞ்சக கலைஞனாக்கியது ‘காதல்’ மற்றும் குடும்ப படங்கள் தான். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு பலம் என கூறப்படும் மாஸ்+ ஆக்ஷன் படங்களைக்காட்டிலும் ‘காதல்’ படங்கள் அவரது இமேஜை மக்களிடம் பரவலாக்க உதவியிருக்கின்றன.

தொடர்ந்து அப்பாவின் படங்களில் நடித்து வந்த விஜய்க்கு ‘பூவே உனக்காக’ திரைப்படம் கொடுத்த வெற்றி அவரது திரை வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் விஜய்க்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இதனைதொடர்ந்து லவ் டுடே, காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரண்ட்ஸ் ஆகிய படங்களின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் ஈர்த்தார்.

90களின் விடலை விஜய்யை இளைஞனாக்கியிருந்தது ‘ஷாஜஹான்’. மெச்சூரிட்டி கூடக்கூட அவர்மீதான வயோதி தோற்றத்திற்கு பதிலாக ஈர்ப்பும் ரசிப்பும்தான் கூடிக்கொண்டிருக்கிறது. இன்றுவரை அது தான் விஜய்க்கான இடத்தை தனித்து நிற்கவைக்கிறது. அதன் பிறகு தனது பாணியை முற்றிலும் மாற்றி திருமலை படத்தின் மூலம் அதிரடி ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்தார். விஜய் நடித்து வெளியான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி உள்ளிட்ட படங்கள் மிகப் பெரிய வெற்றி விஜய்யை மாஸ் அந்தஸ்து கொண்ட நடிகராக மாற்றியது.

நடிகர் விஜய் படப்பிடிப்புத் தளத்தில் தனது செல்போனை உபயோகிக்கமாட்டார், அதற்குப் பதிலாக படப்பிடிப்புத்தளத்தில் நடப்பதை அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பார் என அவருடன் நடித்த துணை நடிகர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, காவலன், வேலாயுதம் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெறாத போது விஜய் சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என பேச்சுக்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து வெளிவந்த நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. அதுவரை இளைய தளபதி விஜய் என அழைத்து வந்த ரசிகர்கள், பிறகு தளபதி என அழைக்க தொடங்கினர்.

Also read… Kalki 2898 AD: வெளியான நான்கு நாட்களில் 500 கோடியை தாண்டியது வசூல்

தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கும் போது தான் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் நடிப்பதை நிறுத்த உள்ளதாக விஜய் அறிவித்தது ரசிகர்களிடையே பேர் அதிர்ச்சியை ஏற்படித்தியது. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்தார். கட்சி பெயரில் எழுதுப் பிழை இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததும் கட்சியின் பெயரினை, தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி அறிவித்தார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அடுத்ததாக தளபதி 69 படத்தில் ஹெச் வினோத்துடன் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படங்களுடன் விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் பல ஆண்டுகளுக்கு முன் தனது ரசிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் விஜயின் ரசிகைகள் பல கேள்விகளை அவரிடம் எழுப்புகின்றனர். அப்போது நீங்க செஞ்ச குறும்பான விசயம் என்ன என ஒரு ரசிகை கேட்க, அதற்கு பதிலளித்த விஜய் அப்படி நிறைய இருக்கு. இப்போ ஒன்னு நியாபகம் வருது. காலேஜ் படிக்கும் போது நாங்க பசங்க பொண்ணுங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ஒரு ட்ரிப் போனோம். அப்போ ட்ரெய்ன்ல 2 பேர் எங்க பொண்ணுங்க ஃப்ரண்ட்ஸ்ட மிஸ் பிகேவ் பன்னாங்க அவங்கள நா என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் அடிச்சு அனுப்பிட்டோம். அடுத்த ஸ்டேஷன் வரதுகுள்ள அவங்க 2 பேரும் 40 பேற வரவச்சுட்டாங்க. அவங்க எங்க எல்லாரையும் அடிச்சு அப்பறம் நாங்க திரும்ப சென்னை வரப்போ என் ஃப்ரண்ட்ஸ் 4, 5 பேர் கைல கட்டு எல்லாம் போட்டுட்டு வந்தாங்க என்று அந்த வீடியோவில் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

Stories