விஜய் விரலில் ‘GOAT’ மோதிரம்… இணையத்தை கலக்கும் போட்டோ! - Tamil News | Actor Vijay Wear GOAT Ring photo viral on social media | TV9 Tamil

விஜய் விரலில் ‘GOAT’ மோதிரம்… இணையத்தை கலக்கும் போட்டோ!

Published: 

04 Oct 2024 12:42 PM

அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் கடைசி படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கோட் என பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தை அணிந்துள்ள விஜய், மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.

விஜய் விரலில் ‘GOAT மோதிரம்... இணையத்தை கலக்கும் போட்டோ!

விஜய்

Follow Us On

நடிகர் விஜய் தனது விரலில் ‘GOAT’ என்று போடப்பட்ட மோதிரத்தை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது. விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் சோலோவாக ரிலீஸ் ஆனது. இந்தியா முழுவது, சுமார் 5 ஆயிரம் ஸ்க்ரீன்களில் ரிலீஸ் ஆனது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது. தீவிர அரசியலில் களம் இறங்க உள்ள விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்ததால் இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக இந்தப் படம் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜயுடன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி அஜ்மல் அமீர், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது.

படத்தில் அப்பா விஜய் ரா ஏஜென்டாக நடித்துள்ளார்.  இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பா கதாப்பாத்திரத்திற்கு காந்தி என்றும் மகன் கதாப்பாத்திரத்திற்கு ஜீவன் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. படம் பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. குறிப்பாக தோனி களமிறங்கும் காட்சியெல்லாம் திரையில் காட்டப்பட்டபோது ரசிகர்கள் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்ந்தது.

Also read… கங்குவா படத்தில் இசை வெளியீட்டு விழா எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

விஜயுடன் ரா ஏஜென்ட் அணியில் பிரபுதேவா, பிரஷாந்த் மற்றும் அஜ்மல் அமீர் உள்ளனர். ரா ஏஜென்ட்டாக இருந்த மோகன் நாட்டிற்கு துரேகம் செய்ததால் அவர் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியா மீது தாக்குதல் நடத்த உள்ள தீவிரவாதிகளை பிடிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக மோகனின் குடும்பத்தினர் உயிரிழந்துவிடுகின்றனர். தனது குடும்பத்துடன் பாங்காங்கிற்கு சுற்றுலா செல்லும் காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. அதில், தனது மகனையே இழக்கிறார். அந்த அமைப்பே வேண்டாம் என இமிகிரேஷன் அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி அவருடைய ரூபத்திலேயே காத்திருக்கிறது.

விஜையை பழி தீர்க்க முடிவெடுத்த மோகன் விஜயின் மகனை கடத்தி விஜக்கு எதிராக வளர்க்கிறார். வில்லனாக மோகன் செய்யவேண்டிய பழிவாங்கும் விசயத்தை தனது வளர்ப்பு தந்தைக்காக விஜயின் மகனே விஜய்க்கு எதிராக செய்கிறார். இதிலிருந்து விஜய் எப்படி தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கிறார் என்பது கதையாக உள்ளது.

Also read… தளபதி 69 படத்தில் இணைந்த நடிகர் நரேன்… போஸ்டரை வெளியிட்ட படக்குழு

நீண்ட நாட்களாக சீரியஸான ரோல்களில் தோன்றி வந்த விஜய் இந்தப் படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸ் என அனைத்தும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு கூஸ்பம்சாக இருக்கிறது.

இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் கடைசி படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கோட் என பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தை அணிந்துள்ள விஜய், மாஸாக போஸ் கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version