விறுவிறுப்பாக நடைபெறும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் எப்போ முடியும்? இணையத்தை கலக்கும் மாஸ் அப்டேட்

விஜயின் 69-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜு,  நரேன் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

விறுவிறுப்பாக நடைபெறும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் எப்போ முடியும்? இணையத்தை கலக்கும் மாஸ் அப்டேட்

விஜய்

Published: 

02 Dec 2024 13:28 PM

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வரும் நிலையில் படத்தின் ஷூட்டிங் எப்போது முடியும் என்பது குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி விஜய் நடிப்பில் அவரது 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். பிரபல ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25-வது படமாக கோட் படம் உருவானது. நீண்ட நாட்களாக தொடர்ந்து சீரியஸான கேரக்டர்களில் நடித்து வந்த விஜய் இந்தப் படத்தில் காமெடி, காதல், கிண்டல், சைலன்ட், டான்ஸ், எமோஷன், டயலாக் டெலிவரி என மாஸ் காட்டியுள்ளார். டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார்.

குறிப்பாக விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸ் என அனைத்தும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு கூஸ்பம்சாக இருந்தது. இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், வைபவ் , பிரேம்ஜி அஜ்மல் அமீர், மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரிதிருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில், ”ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் வருகிறார்” என்று குறிப்பிட்டு படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதையும் இதற்கு அனிருத் இசையமைக்க உள்ளதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Also read… மூன்று வார முடிவில் கங்குவா வசூலித்தது எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ

மேலும் இந்தப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் தளபதி 69 படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விஜயின் இறுதிப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார்.

விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களை எமோஷனல் ஆக்கியது. தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அது இணையத்தில் வைரலானது.

Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன்… யார் யாரை நாமினேட் செய்கிறார்கள்?

விஜயின் 69-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படமாகும். இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜு,  நரேன் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறக்கு தீபாவளி பண்டிகைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியது படக்குழு. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் முழுவதுமாக தளபதி 69 படத்தின் ஷூட்டிங் முடிவடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

குளிர் காலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டுமா?
எந்த மாதிரி பார்ட்னர் கிடைத்தால் ஓகே சொல்லலாம்?
40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?