5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actor Vijay : கோட் திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் நிறைவு.. மாஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

GOAT 100th Day : தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருப்பவர் விஜய். இவரின் நடிப்பில் மிகப்பிரம்மாண்ட கதைக்களத்துடன் வெளியான திரைப்படம் கோட். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் வெளியாகி, தற்போது 100 நாட்களை நிறைவு செய்துள்ளது.

Actor Vijay : கோட் திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் நிறைவு..  மாஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
தி கோட் திரைப்படம்
barath-murugan
Barath Murugan | Updated On: 14 Dec 2024 22:14 PM

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. நடிகர் பிரேம் ஜியின் சகோதரரான இவர் பல திரைப்படங்களை இயக்கியும் அதில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் இவரின் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் “தி கோட்”. நடிகர் விஜய் முன்னணி கதாநாயகனாக இப்படத்தில் நடித்திருந்தார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் கீழ் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் உருவான இப்படம் பெரும் பிளாக் பாஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்திற்குப் பின் விஜயின் நடிப்பில் வெளியான இப்படம் முதல் நாள் வசூலில் சுமார் ரூ 126 கோடியை கலெக்ஷ்ன் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என் இரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் “டீஏஜிங்” என்ற நவீன தொழிநுட்பம் மூலம் விஜய்யின் வயதைக் குறைத்துக் காட்டப்பட்டது.

சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகளாவிய வசூலில் சுமார் ரூ.460 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தி கோட் திரைப்படம் வெளியாகி 100-வது நாளை நேற்றுடன் கடந்த நிலையில், படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் முன்னணி கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய்யுடன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி, பிரசாந்த், மைக் மோகன், பிரபு தேவா மற்றும் வைபவ் எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு படை, அப்பா மகனுக்கு இடையேயான மோதல் எனப் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உருவான இப்படமானது விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிங்க:அரசு கட்டிடத்தை விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்? நடந்தது என்ன?

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட்டாகியது. 2024ம் ஆண்டில் அதிக வசூலைப் பெற்ற தமிழ்த் திரைப்படங்களில் விஜயின் கோட் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

விஜயின் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு மக்களிடையேயும் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பயங்கர வரவேற்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படமானது கடந்த செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகியது. அதைத் தொடர்ந்து இப்படத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை த்ரிஷா என இருவரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.

அதிலும் நடிகர் சிவகார்த்திகேயனிடம் நடிகர் விஜய் துப்பாக்கியைக் கொடுத்துச் செல்லும் காட்சியானது பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது. இதை அடுத்தாக நடிகை த்ரிஷா இப்படத்தில் “மட்ட” என்ற சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அப்பாடலும் இணையத்தில் பயங்கர ஹிட்டாகியது.

இந்த 2024ம் ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட தமிழ்ப் பாடல்களின் பட்டியலில் 3-வது இடத்தையும் பிடித்தது. வெளியான முதல் நாளிலே சுமார் ரூ 126 கோடியை வசூல் செய்து தமிழ்த் திரைப்படங்களில் முதல் ஆணிலே அதிகம் வசூல் செய்துள்ள திரைப்படம் என்று சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க:சூர்யாவை வைத்து படம் எடுக்க மாட்டேன்.. இயக்குநர் மிஷ்கின் அதிரடி!

இந்நிலையில் இந்த கோட் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், 100வது நாளை கொண்டாடும் விதத்தில் சென்னை மதுரவாயிலில் உள்ள ஏ.ஜி.எஸ். திரையரங்கில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது. தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சிறப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தளபதி 69 :

நடிகர் விஜய் இப்படத்தினை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஹச். வினோத் இயக்கத்தில் “தளபதி 69” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே , கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் மற்றும் பாபி தியோல்  என பலரும் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர்அனிருத் ரவிசந்திரன் இசையமைக்கும் இந்த படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரித்துவருகிறது. விஜய் கடைசி படமான தளபதி 69 என்ற இப்படத்தினை தொடர்ந்து முழுவதுமாக அரசியலில் களமிறங்கவுள்ளார்.

Latest News