5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actor Vijay: அண்ணே வரார் வழிவிடு… மாஸாக வெளியானது ‘கோட்’ ட்ரெய்லர்

The GOAT (Official Trailer) Tamil: முன்னதாக கோட் படத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியானது. மேலும், இப்படத்தின் நீளம் 2.45 (hours) மணி நேரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கோட் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

Actor Vijay: அண்ணே வரார் வழிவிடு… மாஸாக வெளியானது ‘கோட்’ ட்ரெய்லர்
‘கோட்’ ட்ரெய்லர்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Aug 2024 17:24 PM

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ கடந்த முன்னதாக வெளியானது. இதையடுத்து விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22-ம் தேதி ’கோட்’ படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ மற்றும் கிளிம்ஸ் வீடியோ என அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை ரசிகர்களுக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தது படக்குழு. ’சின்ன சின்ன கண்கள்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் வெளியானது. பாடகி பவதாரணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குரல் ஏஐ மூலம் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விஜய் மற்றும் சினேகாவின் காம்போவில் உருவாகி இருக்கும் இந்த மொலோடி பாடலை கபிலன் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

Also read… ”இது எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி”… நித்யா மேனனுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்

முன்னதாக கோட் படத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியானது. மேலும், இப்படத்தின் நீளம் 2.45 (hours) மணி நேரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கோட் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரின் தொடக்கத்திலேயே ”அண்ணே வரார் வழிவிடு” என்று தொடங்கிறது. அதிலிருந்து பேசும் பிரசாந்த், “உங்களை லீட் பன்னப்போறது ஒரு புது லீடர்” என்று கூறுகிறார். இது விஜயின் அரசியல் வருகையை குறிக்கும் விதமாக உள்ளது என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அஜித்தின் மங்காத்தா படத்தில் வரும் “இனிமேல் சத்தியமா குடிக்க கூடாதுடா” என்ற வசத்தை விஜய் பேசியுள்ளார். இறுதியில் கில்லி படத்தில் வரும் காமெடி காட்சியான மருதமலை பாடலை விஜய் பாடுவது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Latest News