5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அந்த மூணு பேருக்கு முதலில் கல்யாணம் நடக்கட்டும்… அப்பறம் தான் எனக்கு – நடிகர் விஷால்!

Actor Vishal: இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் சமீபத்தில் நடித்த ரத்னம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நடிகர் விஷால் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ஹரியுடன் ‘ரத்னம்’ படம் மூலம் கைக்காேர்த்திருக்கிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். யோகி பாபு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர்.

அந்த மூணு பேருக்கு முதலில் கல்யாணம் நடக்கட்டும்… அப்பறம் தான் எனக்கு – நடிகர் விஷால்!
விஷால்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 23 May 2024 16:46 PM

தமிழ் சினிமாவில் 40 வயதுக்கு மேலாகியும் முரட்டு சிக்கிளாகவே இருக்கிறார் நடிகர் விஷால். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே அவர் பல மேடைகளில் கூறியது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதுவரை நடிகர் சங்க கட்டிடமும் கட்டி முடிக்கபப்டவில்லை. இவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருக்கிறார். இதனால் இவரது ரசிகர்கள் விஷாலின் திருமணம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அவர் ஒரு பெண்ணை நிச்சயம் செய்த நிலையில் இறுதி நேரத்தில் அந்த திருமணம் ரத்தானதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு திருமணம் நடைபெறும் போதும், திருமண அறிவிப்பு வெளியாகும் போதும் விஷாலின் திருமணம் குறித்த கேள்வி எழுந்து வருகிறது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் சமீபத்தில் நடித்த ரத்னம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நடிகர் விஷால் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ஹரியுடன் ‘ரத்னம்’ படம் மூலம் கைக்காேர்த்திருக்கிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். யோகி பாபு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர். ஹரி – விஷால் காம்போவில் வெளிவந்த தாமிரபரணி, பூஜை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ரத்னம் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

Also read… கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

ஹரி படங்கள் என்றாலே ஆக்‌ஷனுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் ரத்னம் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ விஷால் உடன் அவர் இணைந்திருப்பதால் இப்படமும் ஆக்‌ஷன் நிறைந்த படமாகவே உருவாகி இருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் விஷால் “அந்த மூன்று நடிகர்களுக்கும் திருமணமான பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த பேட்டியில் தான் தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்தபிறகு திருமணம் குறித்து யோசிப்பதாகவும் ஆனால், சல்மான்கான், சிம்பு மற்றும் பிரபாஸ் ஆகியோருக்கு திருமணமான பிறகுதான் தனக்கு திருமணம் என்றும் கூறியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News