5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘Mr.X’ படத்தின் அப்டேட் இதோ

Mr.X Movie Update: ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க முதல் கவுதம் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 2023 ஜுன் 21 ம் தேதி மிஸ்டர் எக்ஸ் படத்துக்கு பூஜை போட்டனர். அப்போதே ஆர்யா - கௌதம் கார்த்திக் காம்பினேஷனை அறிவித்தனர். அத்துடன் மஞ்சு வாரியரும் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக கூறினர். சில தினங்கள் கழித்து, சரத்குமாரும் படத்தில் நடிப்பதாக அறிவித்தனர்.

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘Mr.X’ படத்தின் அப்டேட் இதோ
‘Mr.X’
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2024 16:58 PM

நடிகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘Mr.X’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. Mr.X படத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. 2023 மார்ச் மாதம் படத்தின் ஸ்கிரிப்ட் இறுதிச் செய்யப்பட்டது என தனது பதிவில் ஆர்யா குறிப்பிட்டிருந்தார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க முதல் கவுதம் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 2023 ஜுன் 21 ம் தேதி மிஸ்டர் எக்ஸ் படத்துக்கு பூஜை போட்டனர். அப்போதே ஆர்யா – கௌதம் கார்த்திக் காம்பினேஷனை அறிவித்தனர். அத்துடன் மஞ்சு வாரியரும் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக கூறினர். சில தினங்கள் கழித்து, சரத்குமாரும் படத்தில் நடிப்பதாக அறிவித்தனர்.

திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு உகாண்டா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. சாதாரண ஹீரோவாக இருந்த ஆர்யா சில வருடங்கள் முன்பு வொர்க் அவுட் செய்து, தொடர் பயிற்சிகள் மூலம் சிக்ஸ்பேக் ஹீரோவானார். சார்பட்டா பரம்பரையில் அவரது கதாபாத்திரம் பேசப்பட, அவரது பாடிபில்டர் தோற்றமும் ஒரு காரணம்.

Also read… நீண்ட இழுபறிக்கு பின் வெளியாகும் ‘வாஸ்கோடமாகா’ – ரிலீஸ் தேதி இதோ!

2023 ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் முதல் காட்சி கிளாப் அடித்துத் தொடங்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். ஆர்யாவின் காட்சிகள் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இடையில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைத்துள்ளது. கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்த தகவல் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest News