சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா… இணையத்தை தெரிக்கவிடும் சிம்பு – தனுஷ் போட்டோஸ்!
கமல்ஹாசனா? ரஜினியா?, விஜையா? அஜித்தா? என்ற ரசிகரக்ளின் போட்டியில் விரைவிலேயே இடம் பிடித்தார்கள் சிம்புவும் தனுஷும். இவர்களின் காலத்தில் இணையதள பயன்பாடு சற்று அதிகரித்து வந்த நிலையில் ஃபேஸ்புக்கில் இவர்களின் ரசிகர்கள் யார் பெரிய நடிகர் என்ற போரை தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆனால் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இடையில் எந்த பிரச்னையும் இல்லை என்பதே தனுஷ் மற்றும் சிம்புவின் கருத்தாக இருந்து வந்தது.
நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷின் திருமண வரவேற்பு விழாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகர் தனுஷ் தற்போது இயக்கி நடிக்கும் படம் ‘இட்லி கடை’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் மற்றும் தரணீஸ்வரி தம்பதிக்கு கடந்த வியாழ கிழமை அன்று சென்னையில் திருமணம் நடைப்பெற்றது. முன்னதாக அந்த திருமணத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது நடைப்பெற்ற ஆகாஷின் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துள்ளனர். அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் முந்தைய காலத்தில் இருந்தே நடிகர்களிடையே போட்டி நிலவுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் நடிகர்களுக்குள் போட்டி இருக்கோ இல்லையோ அவர்களது ரசிகர்களுக்குள் அந்த போட்டி அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. இது இன்று நேற்று இல்லை எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் தொடங்கி, ரஜினி – கமல் மற்றும் அஜித் – விஜய், சிம்பு – தனுஷ் என இந்த போட்டி தொடந்து கொண்டே இருக்கிறது.
யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை நடிகர்களுக்குள் வருவதை விட யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை அவர்களின் ரசிகர்களிடையே தான் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இணையதள பயன்பாடு குறைவாக இருந்த காலத்தில் இந்த சண்டைகளும் குறைவாகவே இருந்தது. இணையதள பயன்பாடு அதிகரித்தப்பின் யார் பெரிய ஆள் என்று அடித்துக்காட்டு என்பது போல இணையதள போர்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
Also read… தளபதி விஜய் பட நடிகை தான் இந்த சிறுமி… யார் தெரியுதா?
கோலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு நாயகனாகவும், கதாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், டான்சர், இயக்குநர் என பல்வேறு தளங்களில் தனது முத்திரையைப் பதிப்பவர்கள் வெகு சிலரே. அப்படியான பன்முகக் கலைஞர்களில் ஒருவர் தான் சிம்பு. கடந்த 1983-ம் ஆண்டு பிறந்த பிரபல நடிகர் சிம்புவுக்கு வயது தற்போது 41 ஆகும். இவர் பிறந்ததே சினிமாவிற்கு தான் என்று கூறும் அளவிற்கு தனது சிறு வயதிலேயே நடிப்பை தொடங்கினார்.
கொஞ்சம் லேட்டா வந்தாலும் நானும் எதுக்கும் சலச்சவன் இல்ல என்று கோலிவுட் சினிமாவில் கலமிறங்கி தற்போது ஹாலிவுட் வரை சென்றவர்தான் தனுஷ். தனது பதின் வயதில் நடிப்புத் துறைக்கு வந்த தனுஷ் தற்போது நடிகர், பாடலாசிரியர், இயக்குநர் என்று சினிமாவில் ரவுண்டுகட்டி வலம் வந்துகொண்டிருக்கிறார்.
Also read… விவாகரத்து தொடர்பாக சோசியல் மீடியாக்களில் அவதூறு… எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பிய ஏ ஆர் ரகுமான்
இந்த நிலையில் கமல்ஹாசனா? ரஜினியா?, விஜையா? அஜித்தா? என்ற ரசிகரக்ளின் போட்டியில் விரைவிலேயே இடம் பிடித்தார்கள் சிம்புவும் தனுஷும். இவர்களின் காலத்தில் இணையதள பயன்பாடு சற்று அதிகரித்து வந்த நிலையில் ஃபேஸ்புக்கில் இவர்களின் ரசிகர்கள் யார் பெரிய நடிகர் என்ற போரை தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆனால் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இடையில் எந்த பிரச்னையும் இல்லை என்பதே தனுஷ் மற்றும் சிம்புவின் கருத்தாக இருந்து வந்தது.
.@SilambarasanTR_ & @dhanushkraja @AakashBaskaran @DawnPicturesOff #SilambarasanTR #Dhanush pic.twitter.com/VPqgty3Nzr
— KiranSa (@kiransaphoto) November 23, 2024
இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் – தரணீஸ்வரி தம்பதிகளின் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் சந்தித்து தங்களது அன்பைப் பரிமாறிக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.