5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சூரி நாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தின் அப்டேட் இதோ!

Actor Soori: சூரி அடுத்ததாக நாயகனாக நடிக்க உள்ளப் படம் மாமன். இந்தப் படத்தை ‘விலங்கு’ என்ற சூப்பர் ஹிட் வெப் சீரிசை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இதில் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சூரி நாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தின் அப்டேட் இதோ!
சூரி, ஐஸ்வர்யா லெட்சுமிImage Credit source: twitter
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Dec 2024 07:05 AM

நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் படக்குழு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. கோலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விடுதலை. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வெளியான  திரைப்படம் ‘விடுதலை’.  நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன்,  உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான இப்படம் காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சினை  மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தது. நடிகர் சூரி இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

விடுதலைப் படத்தின் முதல் பாகம் ரிலீசான உடனே இரண்டாம் பாக பணிகள் தொடங்கியியது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் உருவாவது தொடர்ந்து தள்ளிப்போனது. இந்நிலையில் இறுதிக்கட்டத்தை படம் எட்டியுள்ளது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த நிலையில் படம் வருகின்ற டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Also read… விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? இணையத்தை கலக்கும் தகவல்

விடுதலை படத்தில் நாயகனாக நடித்தப் பிறகு நடிகர் சூரி தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளார். அதன்படி இந்த ஆண்டில் சூரி கதையின் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெற்றியடைந்த படம் ‘கருடன்’. இந்தப் படத்தில் சசிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடதக்கது.

Also read… Cinema Year Ender: 2024-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய மொழி படங்களின் லிஸ்ட் இதோ!

இதனை தொடர்ந்து சூரி நாயகனாக நடித்து வெளியான படம் ‘கொட்டுக்காளி’. திரையரங்குகளில் மக்களிடையே பெரிய வரவேற்பைப் இந்தப்படம் பெறவில்லை என்றாலும் உலகில் பல்வேறு நாடுகளில் விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. மேலும் இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சூரி.

இந்த நிலையில் சூரி அடுத்ததாக நாயகனாக நடிக்க உள்ளப் படம் மாமன். இந்தப் படத்தை ‘விலங்கு’ என்ற சூப்பர் ஹிட் வெப் சீரிசை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இதில் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் படத்தின் பூஜை புகைப்படங்களை நடிகர் சூரி தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Latest News