“உன் அப்பா என்பதில் பெருமையாக உள்ளது”… மகள் குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!
சூர்யா - ஜோதிகா திரையுலகிற்குள் வந்த புதிதில் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் ஒன்று சேர்ந்து நடித்த இவர்கள், 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள்-ஒரு மகன் இருக்கின்றனர்.
நடிகர் சூர்யா – ஜோதிகா நட்சத்திர தம்பதியின் மகளான தியா எடுத்த லீடிங் லைட் என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த திரைக்கதை எழுத்தாளர் விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிக் கட்டிப் பறப்பவர் நடிகர் சூர்யா. தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் சிவக்குமார். இதுதான் அவரது பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர். சரவணனின் பெயரை சூர்யா என்று மாற்றியது இயக்குநர் மணிரத்னம். சரவணன் என்று ஒரு நடிகர் திரைத்துறையில் இருப்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்கு இந்த பெயரை அவர் வைத்துள்ளார். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை, சிறுவயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றே விரும்பினார்.
Also read… தளபதி 69 படத்தில் இணைந்த நடிகர் நரேன்… போஸ்டரை வெளியிட்ட படக்குழு
படிப்பை முடித்துவிட்டு நடிக்கத் தொடங்குவதற்கு முன் கார்மென்ஸ் தொழிற்சாலை ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். 1997-ம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் சூர்யா. முதல் 4 வருடங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்க முடியாத சூர்யாவின் திரை வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது 2001-ம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படம்.
2003-ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக காக்க காக்க படத்தில் கலக்கியிருப்பார். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கஜினி மற்றும் சிங்கம் போன்ற அவரது பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டன. சமீபத்தில் சூரரைப் போற்று படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடதக்கது. ராம் கோபால் வர்மாவின் கேங்ஸ்டர் படமான ரக்த சரித்ரா 2 மூலம் சூர்யா ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமானார்.
Also read… கார்த்தியின் ’மெய்யழகன்’ படத்திலிருந்து வெளியானது ‘ஊர் மண்ணே’ லிரிக் வீடியோ
கங்குவா, சூர்யா 44 என வரிசையாக படங்களில் நடித்து வரும் சூர்யா தனது மகள் குறித்து வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சூர்யா – ஜோதிகா திரையுலகிற்குள் வந்த புதிதில் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் ஒன்று சேர்ந்து நடித்த இவர்கள், 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள்-ஒரு மகன் இருக்கின்றனர். நடிகர் சூர்யா – நடிகை தம்பதியரின் மகள் தியா. இவர் சினிமா, ஊடகம் உள்ளிட்ட துறைகளில் பெண் கேஃபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த ஆவணப் படத்திற்கு, ” Leading Light – The Untold Stories Of Behind The Scenes” என பெயரிடப்பட்டுள்ளது. அப்படி அவர் இயக்கிய ஆவணப்படத்திற்கு தற்போது விருது கிடைத்துள்ளது.
இந்த நிலையில், சூர்யா – ஜோதிகா இருவரும் தங்களது மகள் தியா விருது வாங்கிய் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், தங்கள் மகளை நினைத்து பெருமைப்படுவதாக குறிப்பிட்டிருக்கின்றனர்.