Suriya 45 updates: திரிஷா மட்டுமல்ல.. வரிசைக்கட்டும் நடிகர்கள்.. சூர்யா 45 பட அப்டேட்!
Suriya 45 Movie : தமிழ் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. கடைசியாக இவரின் நடிப்பில் கங்குவா திரைப்படம். இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா44 மற்றும் சூர்யா45 என இரு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது சூர்யா44 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியின் சூர்யா45 படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கங்குவா. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா44 என்று தற்காலிக டைட்டில் வைத்திருக்கும் படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் “சூர்யா 45” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கோவை பொள்ளாச்சியில் சிறப்பாக ஆரம்பமாகியது.
நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரமாக நடித்துவரும் இப்படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்துவருகிறார் என அதிகாரப்பூர்வ தகவல்களைப் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், நடிகை த்ரிஷாவை தொடர்ந்து இப்படத்தில் யார் யார் நடித்து வருகின்றனர் தெரியுமா?. நடிகை த்ரிஷவை தொடர்ந்து “லப்பர் பந்து” திரைப்பட பிரபல நடிகை சுவஸ்திகா, நகைச்சுவை நடிகர் யோகோபாபு, நட்டி நட்ராஜ் , நடிகை ஷிவதா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் எனப் பலரும் இணைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமான தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்பட தோல்விக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா44 என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். சூர்யாவுடன் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் பொங்கல் திருநாளோடு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஆண்டாள் கோவில் கருவறைக்குள் சென்ற இளையராஜாவை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
இதையடுத்தாக தற்போது நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா45 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா முன்னணி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை த்ரிஷா உடன் இணைந்து நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில் , கடந்த வாரம் அவர் நடிப்பதை உறுதி செய்யும் விதத்தில் படக்குழு தகவல்களை வெளியிட்டது.
இப்படத்திற்காக முதலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இந்தநிலையில், பின் அவர் இப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வளர்ந்துவரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.
இதையும் படிங்க:அல்லு அர்ஜுனை கைது செய்தது நியாயமே இல்லை – நடிகர் சரத்குமார் காட்டம்
சூர்யாவுடன் நடிகை திரிஷா 19 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. கோவை பொள்ளாச்சி பகுதிகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மிகப் பிரம்மாண்டமாக நடந்துவருகிறது. இப்படத்தில் த்ரிஷாவை தொடர்ந்து நடிகை சுவஸ்திகா, ஷிவதா, நட்டி நட்ராஜ் , நடிகர் யோகி பாபு மற்றும் இந்திரன்ஸ் எனப் பல பிரபலங்களும் இப்படத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வ தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
மிகப் பிரமாண்டமான கதைக்களத்துடன் உருவாகிவரும் இப்படத்தில் இவர்களைத் தொடர்ந்து இன்னும் பல நடிகர்களும் இணைந்து நடித்துவருகின்றனர். சூர்யா45 திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய் பீம் திரைப்படங்களைப் போல இப்படத்திலும் க்ரைம் பற்றிய சுவாரஸ்ய கதைகளுடன் அமையும் என்று கூறப்படுகிறது.விறுவிறுப்பாகப் படப்பிடிப்புகள் நடந்துவரும் நிலையில், இத்திரைப்படம் வரும் 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:கிறிஸ்துவ முறைப்படி கல்யாணம்…கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் போட்டோஸ்