Cinema Rewind: ’தர்மதுரை’ படத்தில் சின்ன ரோல்தான்… ஆனால் – ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன விசயம் - Tamil News | Actress Aishwarya Rajesh shares her experience in Dharmadurai movie | TV9 Tamil

Cinema Rewind: ’தர்மதுரை’ படத்தில் சின்ன ரோல்தான்… ஆனால் – ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன விசயம்

Published: 

19 Aug 2024 17:03 PM

தொடர்ந்து அழுத்தமான கதைக்களங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்த படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தப் படம் ‘கனா’. விவசாயத்தையும், பெண்கள் கிரிக்கெட்டையும் பேசிய இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனித்துவமிக்க நாயகியாக திகழ்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Cinema Rewind: ’தர்மதுரை’ படத்தில் சின்ன ரோல்தான்... ஆனால் - ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன விசயம்

ஐஸ்வர்யா ராஜேஷ்

Follow Us On

தர்மதுரை படத்தில் நடித்த அன்புச்செல்வி கதாப்பாத்திரம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சினிமாவில் தனது திறமையால் குறுகிய காலத்தில் உயரத்திற்கு சென்ற நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நாயகனாக நடித்த ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தில் அவரது துடுக்குதனமான பேச்சு ரசிகர்களை கவர்ந்தது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து அழுத்தமான கதைக்களங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்த படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தப் படம் ‘கனா’. விவசாயத்தையும், பெண்கள் கிரிக்கெட்டையும் பேசிய இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனித்துவமிக்க நாயகியாக திகழ்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்ந்து நாயகிகளை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக புலிமடா படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தர்மதுரை படம் 8 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கதாப்பாத்திரம் குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்களின் நடிப்பில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2016ல் வெளியான படம் தர்மதுரை. ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றால் அவன் எதிர்கொள்ளும் சூழல்களை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

Also read… பாலிவுட் நடிகருடன் இணையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்?

ஆர்.கே. சுரேஷின் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, வைரமுத்துவின் வரிகள், சுகுமாரின் ஒளிப்பதிவு என தொழிநுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. யதார்த்தமான விஜய் சேதுபதியை தமிழ் சினிமா கொண்டாடிய காலத்தில் வெளியான இப்படம் அவருக்கு குடும்ப ஆடியன்ஸை பெற்றுத் தந்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, தர்மதுரை படத்தில் ‘அன்புச்செல்வி’ என்ற கதாப்பாத்திரம் சின்ன ரோல் தான் என்றாலும் அந்த பாத்திரத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த அன்புச்செல்வி மிகவும் அப்பாவி. அந்த பொண்ணுக்கு மத்தவங்கள கஷ்டப்படுத்த தெரியாது. அது சின்ன ரோல் என்றாலும் அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பவும் மதுரை பக்கம் போனா அன்புச்செல்வி கதாப்பாத்திரம் தான் மக்கள் கொண்டாடுறாங்க என்று ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னதாக பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.

நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
Exit mobile version