CID Sakunthala Passed Away: பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா காலமானார்… இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர் - Tamil News | actress cid sakunthala died due to age releated issue | TV9 Tamil

CID Sakunthala Passed Away: பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா காலமானார்… இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்

Published: 

18 Sep 2024 11:55 AM

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் சிஐடி சகுந்தலா நடித்துள்ளார். சிவாஜி கணேசன் உடன் தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை, பாரதவிலாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சிஐடி சகுந்தலா, எம்.ஜி.ஆர் உடனும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். 

CID Sakunthala Passed Away: பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா காலமானார்... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்

நடிகை சி.ஐ.டி சகுந்தலா

Follow Us On

வயது மூப்பு காரணமாக பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமானதால், அதன் பிறகு ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. இவருக்கு தற்போது 84 வயது. வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1960-ம் ஆண்டு கைதி கண்ணாயிரம் படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய சகுந்தலா, ஜெய்சங்கர் நடிப்பில் 1970-ம் ஆண்டு வெளியான சிஐடி சங்கர் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அப்படத்தின் மூலம் அடையாளம் கிடைத்ததால் சிஐடி சகுந்தலா என அழைக்கப்பட்டார். 1960களில் இருந்து 2000ஆவது ஆண்டு வரை சுமார் 40 ஆண்டு காலம் சினிமாவில் ஹீரோயின், வில்லி, குணச்சித்திரம் போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார்.

பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் கிளாமர் ரோலில் துணிச்சலாக நடித்த சிஐடி சகுந்தலா, பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி புகழ் பெற்றுள்ளார். இவரது நடனத்தை காண்பதற்கே தனியொரு ரசிகர்கள் கூட்டம் இருந்துள்ளது.

குரூப் டான்சர்களில் ஒருவராக இருந்த சகுந்தலா திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இதனிடையே மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் சகுந்தலாவின் அழகை பார்த்து அவருக்கு தங்கள் தயாரிப்பில் உருவான படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு அளித்தார். அப்படி அவர் ஹீரோயினாக அறிமுகமான படம் தான் சிஐடி சங்கர்.

Also read… நடிகர் உபேந்திரா ‘கூலி’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதன் காரணம் இதுதானா – அவரே சொன்ன தகவல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் சிஐடி சகுந்தலா நடித்துள்ளார். சிவாஜி கணேசன் உடன் தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை, பாரதவிலாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சிஐடி சகுந்தலா, எம்.ஜி.ஆர் உடனும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

1970களில் பிசியாக நடித்து வந்த சகுந்தலாவுக்கு 1980களில் புதுப்புது நடிகைகளின் வரவால் மார்க்கெட் சரியத் தொடங்கியது. இதனால் ஒருகட்டத்தில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய சகுந்தலா, சீரியல் பக்கம் சென்றார். சினிமாவிலிருந்து விலகிய பிறகு சீரியல்களில் நடித்து வந்தார். அதேபோல் தமிழில் பிரபலமான குடும்பம், சொந்தம், வாழ்க்கை, கஸ்தூரி போன்ற சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சினிமாவிலிருந்து விலகிய பிறகு சீரியல்களில் நடித்து வந்தார். 84 வயதாகும் சிஐடி சகுந்தலா பெங்களுருவில் வசித்து வந்துள்ளார். வயது மூப்பு காரணமாக உடல நல குறைவு ஏற்பட்ட நிலையில் தனியார் மரு்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிஐடி சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version