5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Divya Sridhar: அதுக்காக மட்டும் தான் கல்யாணம் பண்ணனுமா? – ஓபனாக கேட்ட மலையாள நடிகை!

நாங்கள் ரகசியமாக இல்லாமல் நான்கு பேருக்கு திருமணம் செய்யப் போகிறோம் என்பதை தெரிவிக்க விரும்பினோம். ஆனால் இது தொடர்பாக பலர் பதிவிட்டுள்ள கமெண்ட்கள் பாசிட்டிவாக இல்லை. எதற்காக இப்படி விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வி தான் எங்களுக்கு தோன்றியது. திருமணம் செய்வது என்பது அவ்வளவு பெரிய தவறான செயலா என தெரியவில்லை. நெகட்டிவ்வாக பேசுகிறவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்ததை வைத்து கூறுகிறார்கள் என நினைக்கிறேன் என திவ்யா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Divya Sridhar: அதுக்காக மட்டும் தான் கல்யாணம் பண்ணனுமா? – ஓபனாக கேட்ட மலையாள நடிகை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 02 Nov 2024 14:16 PM

திருமணம் பற்றி விமர்சனம்: பிரபல மலையாள நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் ஆகியோர் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இணையவாசிகள் தாறுமாறாக கமெண்டுகள் செய்வதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இருவரும் பல படங்களில் இணைந்து நடித்த நிலையில் பத்திரமாற்று என்ற சீரியலில் நடித்தனர். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் வைத்து வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதனிடையே திருமணம் செய்துக் கொண்ட  கிறிஸ்து வேணுகோபால் மற்றும் திவ்யா ஸ்ரீதர் ஆகியோரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனைக் கண்ட இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தனர். அதற்குக் காரணம் மாப்பிள்ளையான கிறிஸ் வேணுகோபால் வயதான தோற்றத்தில் தாடியுடன் இருந்தது தான். இதற்கெல்லாம் நடிகை திவ்யா ஸ்ரீதர் செய்தியாளர் சந்திப்பின்போது போது பதிலளித்தார்.

Also Read: TVK Vijay: விஜய்க்கு ஆளக்கூடிய தகுதி வந்துவிட்டது.. இயக்குநர் பிரவீன் காந்தி புகழாரம்!

அதாவது நாங்கள் ரகசியமாக இல்லாமல் நான்கு பேருக்கு திருமணம் செய்யப் போகிறோம் என்பதை தெரிவிக்க விரும்பினோம். ஆனால் இது தொடர்பாக பலர் பதிவிட்டுள்ள கமெண்ட்கள் பாசிட்டிவாக இல்லை. எதற்காக இப்படி விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வி தான் எங்களுக்கு தோன்றியது. திருமணம் செய்வது என்பது அவ்வளவு பெரிய தவறான செயலா என தெரியவில்லை. நெகட்டிவ்வாக பேசுகிறவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்ததை வைத்து கூறுகிறார்கள் என நினைக்கிறேன்.

நாங்கள் திருமணம் செய்து கொண்டால் கண்டிப்பாக நெகட்டிவ் கமெண்ட்கள் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு மோசமாக வரும் என எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் பாலியல் ஆசைக்காக நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னுடைய பிள்ளைகள் பாதுகாப்பாக வளர வேண்டும், வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் திருமணம் செய்து கொண்டேன். அவர்களுக்கு ஒரு தந்தை வேண்டும், எனக்கு கணவர் எனக் கூறுவதற்கு ஒரு அடையாளம் வேண்டும் என நினைத்தேன். பாலியல் உறவு கொள்வது மட்டும்தான் வாழ்க்கையா? அது இல்லாமல் இருக்க முடியாதா?

வாழ்க்கையில் ஒரு பகுதி தான் பாலியல் உறவு. கிறிஸ் வேணுகோபாலுக்கு 60 வயதும் எனக்கு 40 வயதும் என சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள் ஆனால் உண்மையில் வேணுகோபாலுக்கு 49 வயது தான் ஆகிறது. எனக்கு 40 வயது தான் ஆகிறது. இனி எங்கள் வயதைப் பற்றி தவறாக பேசுபவர்கள் பேசிக் கொள்ளட்டும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என திவ்யா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். திவ்யா ஸ்ரீதருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர் முதல் கணவரை விவாகரத்து செய்திருந்தார். இதனிடையே இரண்டாவதாக  கிறிஸ் வேணுகோபாலை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் அவரின் இரண்டு குழந்தைகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Also Read: Thirumavalan vs Vijay: ஒரே நிகழ்ச்சியில் திருமா – விஜய் ? எங்கே ? எப்போது? அரசியலில் நடக்கப்போகும் புது ட்விஸ்ட்.. ..

மேலும் திவ்யா ஸ்ரீதர் கிறிஸ் வேணுகோபாலை திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்ததாக தகவல் வெளியானபோது கலையுலகைச் சேர்ந்த பலரும் அவர் நல்லவர் என இல்லை என தெரிவித்திருக்கின்றனர். மேலும் தனது காதல் கதையையும் அவர் கூறியிருந்தார். அதாவது,  “எனக்கு கிறிஸை பற்றி பெரிதாக தெரியாது. பத்திரமாற்று சீரியலின் மூன்று நாள் படப்பிடிப்பு இருந்தது. முதல்முறையாக செட்டுகளுக்கு செல்ல எனக்கு பயமாக இருந்தது. முதலில் நான் அவரிடம் பேசவில்லை. ஆனால் ஏன் கிறிஸ் வேணுகோபால் தாடி வளர்த்தார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன்.

அவரைப் பற்றி என்னுடைய உறவினர் மூலம் சில விஷயங்களை தெரிந்துக் கொண்டேன். 3 ஆம் நாள் ஷூட்டிங்கின் போது அவர் ஒரு பாடலை பாடி என்னிடம் அந்த பாடலை அனுப்பச் சொன்னார். ஆனால் நான் ஏற்கனவே குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் தவித்துக் கொண்டிருந்தேன். 8 வருடங்களாக என் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். நான் எப்படி வாழ்ந்தேன் என்று யாரும் இத்தனை வருடங்களில் கேட்கவில்லை. அவரிடம் பேசுவது மன அமைதியை தந்தது. என்னுடைய உறவினர் கிறிஸ் வேணுகோபால் மனைவியாக உனக்கு சம்மதமா என கேட்டார். நான் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கிண்டல் செய்கிறார் என நினைத்தேன் என திவ்யா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Latest News