5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அம்பேத்கர் – காந்தி குறித்து பேசிய ஜான்வி கபூர்… வைரலாகும் வீடியோ!

படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் நடிகை ஜான்வி கபூர் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ”வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ``தேசத்தந்தை மகாத்மா காந்திக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கருக்கும் இடையில் சாதி குறித்த அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் – காந்தி குறித்து பேசிய ஜான்வி கபூர்… வைரலாகும் வீடியோ!
ஜான்வி கபூர்.
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 26 May 2024 14:36 PM

மறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, தடாக் படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜான்வி கபூர். இந்தி திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நடிகை ஜான்வி தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் மற்றும் ஜான்வி நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் நடிகை ஜான்வி கபூர் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ”வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “தேசத்தந்தை மகாத்மா காந்திக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கருக்கும் இடையில் சாதி குறித்த அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

Also read… பாயல் கபாடியா படத்துக்கு கான் திரை விழாவில் உயரிய ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது!

”அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், பல்வேறு விஷயங்களில் அவர்கள் கொண்டிருந்த பார்வையையும் அறிந்துகொள்ளலாம். மேலும் அந்த விவாதம் அழுத்தமான விவாதமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜான்வி கபூரிடம் “உங்கள் பள்ளியில் சாதி குறித்து விவாதம் நடக்குமா?” என கேள்வி கேட்க, “பள்ளி மட்டுமல்ல, எனது வீட்டிலும் கூட அது தொடர்பான விவாதம் நடந்தது கிடையாது” என்று அவர் பதிலளித்துள்ளார். அவரது பதிலை பார்த்த ரசிகர்கள் ஜான்வி கபூர் இவ்வளவு சூப்பராக அரசியல் பார்வையுடன் சிந்திக்கிறார் என நெட்டிசன்கள் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

Latest News