5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

48 வயது ஹீரோ என்னை விட இளமையா இருக்கிறார்… ஜான்வி சொன்னது யார் தெரியுமா?

Actress Janhvi kapoor: பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி என்ற படத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் மற்றும் ஜான்வி நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி படம் கடந்த மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

48 வயது ஹீரோ என்னை விட இளமையா இருக்கிறார்… ஜான்வி சொன்னது யார் தெரியுமா?
ஜான்வி
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jun 2024 14:56 PM

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகியாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் 48 வயதாகும் தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னை விட இளைமையாக தெரிகிறார் என்று கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, தடாக் படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜான்வி கபூர். இந்தி திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நடிகை ஜான்வி தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி என்ற படத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் மற்றும் ஜான்வி நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி படம் கடந்த மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தென்னிந்தியா படங்களில் அவர் எப்போது இணைவார் என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்த நிலையில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து தேவரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் அடுத்ததாக ராம்சரணுடனும் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஜான்வி கபூர்.

Also read… சினிமாவில் இந்த பாகுபாடு வருத்தம் அளிக்கிறது – நடிகை ராஷி கண்ணா

சமீபத்தில் ஜான்வி கபூர் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு தென்னிந்திய நாயகனைப் பற்றி வியந்து பேசி இருக்கிறார். அது என்னவென்றால், நடிகர் மகேஷ் பாபுவை பற்றி தான் ஜான்வி பேசி இருக்கிறார். “அவருக்கு வயசே ஆகாதா, நீண்ட காலமாக இதே மாதிரி இருக்கிறார்.” “சொல்லப்போனால் என்னை விட அவர் சில நேரம் இளமையாக தெரிகிறார்” என ஜான்வி கூறி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News