கங்குவா படத்தில் 30 நிமிடங்கள் சத்தம் இரைச்சலாக உள்ளதை ஒத்துக்கொள்கிறேன் – ஜோதிகா
Jyothika about Kanguva: கங்குவா படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அதில் அவர் "சூர்யாவின் மனைவியாக அல்லாமல் ஒரு சினிமா ரசிகையாக கூறுகிறேன். கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் அதிகமான சத்தம் காரணமாக ரசிகர்களிடம் சென்று சேரவில்லை.
கங்குவா படத்தில் முதல் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன் என்று நடிகை ஜோதிகா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது கங்குவா படம். இயக்குநர் சிறுத்தை சிவா இந்த படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படம் மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் சூர்யாவின் கங்குவா படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது.
படம் வெளியானதில் இருந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பெரும் சரிவை ஏற்படுத்துகிறது என்பதே ரசிகர்களின் விமர்சனம். படத்தில் பல காட்சிகளில் பிண்ணனி இசை படத்தின் வசனங்களை தெளிவாக கேட்க விடாமல் ஓவர்லாப் செய்வதாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
படத்தில் ஒலி அதிகமாக இருப்பதாக வந்த விமர்சனத்தை தொடர்ந்து ஒலியின் அளவை 2 பாயிண்ட் குறைத்து படத்தை ஓட்டுமாறு திரையரங்கு உரிமையாளர்களிடம் தயாரிப்பாளர் ஞானவேல் கோரிக்கை வைத்திருந்தார். ஆனாலும் அந்த பிரச்னை தொடர்வதாக படம் பார்த்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
படம் கி.பி 1070-ல் தொடங்குவது போன்று காட்டப்படும். அப்போது கடலுக்குள் சுற்றும் ரோமானியர்களின் கப்பல் படை தங்களது வீரர்கள் ஓய்வு பெற ஒரு இடத்தை தேடுகின்றனர். அப்போது கடலை சுற்றி உள்ள 5 தீவுகளில் எந்த தீவை தேர்ந்தெடுப்பது என்று வரும் போது நடிகர் சூர்யா இருக்கும் பெருமாச்சி தீவை ரோமானியர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த தீவின் இளவரசனாக சூர்யா இருக்கிறார்.
அந்த தீவை அடைவதற்காக பல சூழ்ச்சிகள் நடக்கிறது. போஸ் வெங்கெட் ரோமானியர்களுடன் கூட்டு சேர்ந்து நட்டியை வைத்து சூர்யாவின் பெருமாச்சி தீவை கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார். இந்த சூழ்ச்சியில் பெருமாச்சியில் உள்ள 100 பேர் நட்டியால் கொலை செய்வதற்காக அழைத்து செல்லப்படுகின்றனர்.
அந்த கூட்டத்தில் இருந்து கருணாஸ் தப்பித்து பெருமாச்சி இளவரசனான சூர்யாவிடம் தகவலை கூறுகிறார். அதனை தொடர்ந்து நட்டியை பெருமாச்சி இளவரசன் சூர்யா கொலை செய்கிறார். அவருடன் சேர்ந்து அவரது மனைவியும் இறந்துவிடுகிறார். இதனை நேரில் பார்த்த நட்டியின் மகன் சூர்யாவை கொலை செய்ய சூர்யாவுடனே இருந்து திட்டம் தீட்டுகிறான்.
ஆனால் அந்த சிறுவனை சூர்யா தனது மகனாக நினைத்து வளர்க்க நினைக்கிறார். அப்போது மீண்டும் போஸ் வெங்கட் சூர்யாவின் பெருமாட்சி தீவிற்கு எதிரியாக இருக்கும் பாபி தியியோல் மன்னனாக இருக்கு ஆரத்தி தீவிற்கு சென்று அந்த தீவை பெற்றுத் தருமாறு கோரிக்கை வைக்கிறார்.
எதிரி தீவை அழித்தால் தங்க காசுகள் கிடைக்கிறது என்ற ஆசையில் பாபி தியோல் அதற்கு சம்மதித்து அந்த தீவின் மீது போர் தொடுக்க முடிவு செய்கிறார். எதிரிகளிடம் இருந்து சூர்யா தனது தீவை காப்பாற்றினாறா? நட்டியின் மகன் அந்த சிறுவன் சூர்யாவை என்ன செய்கிறார் என்பது படத்தின் கதை.
Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் டாஸ்கில் வன்மத்தை கொட்டிய ஜாக்குலின் – கேள்வி கேட்ட விஜய் சேதுபதி
இந்த நிலையில் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அதில் அவர் “சூர்யாவின் மனைவியாக அல்லாமல் ஒரு சினிமா ரசிகையாக கூறுகிறேன். கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் அதிகமான சத்தம் காரணமாக ரசிகர்களிடம் சென்று சேரவில்லை.
View this post on Instagram
3 மணி நேர படத்தில் அது வெறும் முதல் அரைமணி நேரம் மட்டுமே. ஆனால், கண்டிப்பாக கங்குவா படம் ஒரு சிறந்த அனுபவம். இதுபோன்ற ஒரு ஒளிப்பதிவை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது என்று அதில் ஜோதிகா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவரது அறிக்கையில், சமூக வலைதளத்திலும், சில ஊடகங்களிலும் எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்து மிகவும் ஆச்சரியமானேன் நான். ஏனெனில் முந்தய காலங்களில் அவர்கள் இதே மாதிரி பெரிய பட்ஜெட் திரைப்படங்களை இந்த அளவுக்கு எப்போதும் விமர்சனம் செய்யவில்லை.
Also read… ’கங்குவா’ படத்திலிருந்து வெளியானது முதல் ஸ்னீக் பீக் வீடியோ!
அவற்றில் பெரும்பாலும் பழமையான கதை மற்றும் பெண்களை இழிவுபடுத்துதல், இரட்டை அர்த்தங்களில் பேசுதல் மற்றும் மிக மிக மிக அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. ஆனால் கங்குவாவின் நேர்மையான சாதனைகள் என்னவென்றால்? படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களுக்கான ஆக்சன் காட்சி சிறப்பாக அமைந்திருக்கும். படத்தில் கங்குவா மற்றும் சிறுவன் இருவருக்கும் இடையேயான அன்பு வஞ்சனையும் விமர்சனம் செய்யும் பொழுது மறந்து விட்டார்கள் என நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கங்குவா படத்தின் கதைக்காகவும், 3டியில் அற்புதமான காட்சிகளை காட்டியதற்காகவும், அவர்களின் முயற்சிக்காகவும் படக்குழுவினர் பாராட்டிற்கு தகுந்தவர்கள். கங்குவா அணியை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ஜோதிகா அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.