”கேன்சர் வந்தபோது என்னை கைவிட்டனர்” – வேதனையுடன் பேசிய மனிஷா கொய்ராலா!
Manisha Koirala: சமீபத்தில் பேட்டியில் கலந்துகொண்ட நடிகை மனிஷா கொய்ராலா புற்றுநோய் பாதிப்பின்போது தனக்கு நேர்ந்த மன சங்கடங்கள் குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பாம்பே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. பின்னர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்த இந்தியன் மற்றும் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த முதல்வன் படங்கள் தமிழில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. அதனை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த தில் ஷே படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில், இந்தியன், பாபா, முதல்வன், மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான், மாப்பிள்ளை ஆகிய படங்களில் மட்டுமே அதனை தொடர்ந்து நடித்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியில் கலந்துகொண்ட நடிகை மனிஷா கொய்ராலா புற்றுநோய் பாதிப்பின்போது தனக்கு நேர்ந்த மன சங்கடங்கள் குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அதில், ‘அனைவரும் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனமாக இருங்கள், எனக்கு நிறைய உறவினர்கள், பெரிய குடும்பம் இருக்கிறது. அனைவருமே வசதியானவர்கள் தான், ஆனால் நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது, என்னுடன் யாரும் இல்லை, அனைவரும் விலகி விட்டார்கள். மேலும் பொருளாதார ரீதியாக வசதியாக இருந்தபோதும் கூட நான் புற்றுநோயால் அவதிப்பட்ட காலத்தில் எனது குடும்பத்தினர் கூட கைவிட்டனர்.
Also read… சாதி குறித்து பிரவின் காந்தியின் சர்ச்சை கருத்து… நெத்தியடி பதிலளித்த வெற்றிமாறன்!
எல்லோரும் பிரிந்து போனாலும் என் பெற்றோர், சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் என்னுடன் இருந்தார்கள். எதுவாக இருந்தாலும் நமது குடும்பம் மட்டுமே வாழ்க்கையில் முதலில் வருகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அதற்கு பின்னால் தான்” என மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்க்கு பிறகு வாழ்க்கையில் இரண்டாம் வாய்ப்பு கிடைத்தபோது நேரத்தின் மதிப்பை நான் புரிந்துக்கொண்டேன். நோய் பாதிப்புக்கு முன்பு இருந்த போல, இப்போது என் உடல் இல்லை. என்னால் இப்போது எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடுதான் இருக்கிறேன், அதே வலியோடுதான் என் வேலைகளை செய்கிறேன் என்று மனிஷா கொய்ராலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.