விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் பட வேலை… டப்பிங் பணியை தொடங்கிய மஞ்சு வாரியர்
Vettaiyan Movie Update: அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரஜினியின் ’வேட்டையன்’ படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை மஞ்சு வாரியர் ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் படத்தில் தனது போர்சனுக்கு டப்பிங் பேசும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, ஏற்கனவே லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also read… “ஊருக்கு நல்லவனா இருக்கவன் ஊட்டுக்கு நல்லவனா இருக்கமாட்டான்”… லப்பர் பந்து ட்ரெய்லர் இதோ
வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே நாளில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால், கோலிவுட்டில் பல மாதங்களுக்குப் பிறகு இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டு படங்களில் ஒரு படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
Actress @ManjuWarrier4 at the VETTAIYAN 🕶️ dubbing session. 🎙️
Releasing on October 10th in Tamil, Telugu, Hindi & Kannada!#Vettaiyan 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4… pic.twitter.com/hAkUhiGcUH
— Lyca Productions (@LycaProductions) August 28, 2024
இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இப்படத்துக்கான தனது டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.