5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Megha Akash : மேகா ஆகாஷ் திருமண நிச்சயம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

படவாய்ப்பே இல்லாமல் இருந்த மேகா ஆகாஷ், அசோக் செல்வனுடன் சேர்ந்து சபாநாயகன் படத்தில் நடித்தார். பின் சந்தானம் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். அதன் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் நடிப்பில் உருவாக மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஆகஸ்ட் 2 வெளியானது.

Megha Akash : மேகா ஆகாஷ் திருமண நிச்சயம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 23 Aug 2024 13:03 PM

நடிகை மேகா ஆகாஷிற்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக புகைப்படங்கள் வெளியான நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த படம் பேட்ட. இந்தப் படத்தில் சிம்ரனுக்கு மகளாக நடித்தவர் மேகா ஆகாஷ். அதனைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், ஒரு பக்க காதல் கதை உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், இப்போது இரு மொழிகளிலும் முக்கியமான நடிகையாக வலம் வருகிறார்.

அதன் பின், படவாய்ப்பே இல்லாமல் இருந்த இவர் அசோக் செல்வனுடன் சேர்ந்து சபாநாயகன்படத்தில் நடித்தார். பின் சந்தானம் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். அதன் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் நடிப்பில் உருவாக மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஆகஸ்ட் 2 வெளியானது.

Also read… ‘என் உச்சபட்ச கண்ணீரும், கதறலும் தான் வாழை’ – மாரி செல்வராஜின் உணர்வுபூர்வ பதிவு

 

View this post on Instagram

 

A post shared by Megha Akash (@meghaakash)

தற்போது  திருமணத்துக்கு தயாராகிவிட்டார் மேகா ஆகாஷ். அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை கரம்பிடிக்க உள்ளார். அவர்களின் திருமணத்துக்கு குடும்பத்தினரும் ஓகே சொன்னதால் இருவரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கேரளாவில் நேற்று மிகவும் எளிமையாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மேகா ஆகாஸ் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை மேகா ஆகாஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest News