“இந்து மத சான்றிதழ் கேட்டனர்” – மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மீது நடிகை நமீதா பரபர புகார் - Tamil News | Actress Namitha Alleges rude behaviour by Madurai Meenakshi Amman Temple staffer during her visit | TV9 Tamil

“இந்து மத சான்றிதழ் கேட்டனர்” – மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மீது நடிகை நமீதா பரபர புகார்

Published: 

26 Aug 2024 16:59 PM

Actress Namitha: நமிதா தனது கணவருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த கோவில் அதிகாரி ஒருவர் நடிகை நமீதாவை தடுத்து நிறுத்தி தாங்கள் இந்து மதத்தில் உள்ளவரா? என கேட்டதோடு அதற்கான சான்று எதுவும் உள்ளதா? என கேட்டுள்ளார்.

இந்து மத சான்றிதழ் கேட்டனர் - மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மீது நடிகை நமீதா பரபர புகார்

நடிகை நமீதா

Follow Us On

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து நடிகை நமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2004 ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமிதா. இப்படத்தை தொடர்ந்து தொடர்ந்து ஏய், பம்பர கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, தீ, பில்லா, அழகான பொண்ணுதான், இளமை ஊஞ்சல் எனப் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இவர் சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே இளைஞர்களின் மனதில் ஓரு இடத்தை பிடித்து விட்டார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருவர். இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நீங்கள் இந்துவா, என்ன வகுப்பு, சான்றிதழ் எங்கே என கேட்டு என்னை மனதளவில் காயப்படுத்தி விட்டதாக நடிகை நமிதா தெரிவித்துள்ளார்.

விஜய், அஜித், சரத் குமார், சத்தியராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த நமிதா, அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இதைத்தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்.

நமிதா தனது கணவருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த கோவில் அதிகாரி ஒருவர் நடிகை நமீதாவை தடுத்து நிறுத்தி தாங்கள் இந்து மதத்தில் உள்ளவரா? என கேட்டதோடு அதற்கான சான்று எதுவும் உள்ளதா? என கேட்டுள்ளார்.

Also read… சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி குறித்து தெரியவரும் உண்மை – வைரலாகும் ப்ரோமோ

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நமிதா நான் ஒரு இந்து என்பது அனைவருக்கும் தெரியும், என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ், என கிருஷ்ணனின் பெயர் தான் வைத்துள்ளேன். கோவில்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பது என்பது வருத்தமாக உள்ளது. நான் பல கோவில்களுக்கு சென்று இருக்கிறேன், இந்தியாவில் எந்த கோவிலிலும் இது போன்று தன்னிடம் இந்த கேள்வியை கேட்டது இல்லை.

அதன் பின்னர் மேலதிகாரி வந்து நமிதாவை தரிசனம் செய்ய அனுமதித்ததாகவும் இந்தியாவில் பல கோயிலுக்கு நான் சென்றுள்ளேன், எந்த ஒரு அதிகாரியும் என்னிடம் இதுபோன்ற கேள்வி கேட்டதில்லை என்றும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் நமிதா புகார் அளித்துள்ளார்.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
Exit mobile version