5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நான் விக்னேஷ் சிவனை திருமணமே செய்திருக்க கூடாது… வைரலாகும் நயன்தாரா பேச்சு

நானும் ரௌடிதான் படத்தினால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

நான் விக்னேஷ் சிவனை திருமணமே செய்திருக்க கூடாது… வைரலாகும் நயன்தாரா பேச்சு
விக்னேஷ் சிவன், நயன்தாராImage Credit source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Dec 2024 06:36 AM

இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணமே செய்திருக்க கூடாது என்று நடிகை நயன்தாரா பேட்டி ஒன்றில் பேசியதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியன் நடிகையாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கரே படம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகை நயன்தாரா. கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் நயன்தாரா. அதற்கு அடுத்த படமே சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் ஜோடி போட்டு சந்திரமுகி படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்தார் நயன்தாரா.

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக் கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். இந்தப் படம் உலக அளவில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது குறிப்பிடதக்கது. தமிழ் மட்டும் இன்றி பான் இந்திய நடிகையாக மாறினார் நயன்தாரா.

Also read… Pushpa OTT Release Date: தியேட்டரில் மாஸ் காட்டும் புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

தற்போது நாயகிகளுக்கு முக்கியதுவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா. நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘ராக்காயி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசைமைத்து வருகிறார். இதில் ஆக்‌ஷன் காட்சிகளில் இவர் மிரட்டியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடனான திருமண உறவு குறித்து நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்து பேசியதாக இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது. நடிகர்கள் சிம்பு மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். அதனை தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் விக்னேஷ் சிவன்.

Also read… Kollywood Year Ender: 2024-ம் ஆண்டு ரீ ரிலீசான படங்களின் லிஸ்ட் இதோ!

கடந்த 2015-ம் ஆண்டும் தனது இரண்டாவது படமான நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில் நாயகனாக விஜய் சேதுபதியும், நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நானும் ரௌடிதான் படத்தினால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

நானும் விக்னேஷ் சிவனும் சேராமல் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என நான் யோசித்தது இருக்கிறேன். அவரின் வாழ்க்கையில் நான் இல்லை என்றால் அவருக்கு என தனியாக ஒரு பெயர் இருந்திருக்கும். ஒரு அடையாளம் இருந்திருக்கும். அவர் ரொம்பவே நல்ல மனிதர் என்று நயன்தாரா பேசியதாக வைரலாகி வருகின்றது.

Latest News