Actress Nayanthara : நடிகர் பிரபாஸின் படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா?
The Raja Saab Movie :தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்துவருபவர் நடிகை நயன்தாரா. சினிமாவில் நடிப்பதையும் தாண்டி தற்போது திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். இதையடுத்ததாக தமன்னா மற்றும் சமந்தாவைப் போல நடிகர் பிரபாஸின் படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
தென்னிந்தியத் திரைப்பட நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வருபவர் நடிகை நயன்தாரா. திரைப்படங்களில் தனக்கென தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமான இவர், படங்களில் நடிப்பதைத் தாண்டி தற்போது திரைப்படங்களைத் தயாரிக்கும் வேலைகளிலும் இறங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு , மலையாளம் மாறும் இந்தி எனப் பல மொழி திரைப்படங்களில் நடிகையாகக் கலக்கிவரும் நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைப்பது உண்டு. இந்நிலையில் நடிகைகள் படங்களில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடிப் பிரபலமானதை போல தற்போது , நடிகை நயன்தாராவும் சிறப்புப் பாடலுக்கு நடனமாடுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
தெலுங்கு நடிகர் பிரபாஸ் முன்னணி கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம் “தி ராஜா சாப்”. இப்படத்தில் நடிகை நயன்தாரா, தமன்னா மற்றும் சமந்தாவைப் போல ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க: அரசு சொத்தை விலை பேசினேனா? விக்னேஷ் சிவன் விளக்கம்!
தி ராஜா சாப் திரைப்படத்தில் சிறப்பு நடனமாடும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடென்ட், டாக்சிக், ராக்காயி மற்றும் மூக்குத்தி அம்மன் 2 என சுமார் 7 மேற்பட்ட திரைப்படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.
இவர் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்துவரும் “ராக்காயி” திரைப்படத்தின் அறிமுக வீடியோவானது வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. திரைப்படங்களில் நடிகர்களைத் தவிர்த்து முக்கிய நாயகியாக நடிக்க ஆரம்பித்த இவருக்கு டோரா, ஐயரா மற்றும் கோலமாவு கோகிலா என்ற படங்கள் வெற்றியாக அமைந்தது. இந்நிலையில் இதை அடுத்தாக “ராக்காயி” என்ற படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்து வருகிறார்.
பிரபல நடிகர்களில் படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடிய நடிகைகள் மத்தியில் தற்போது நடிகை நயன்தாராவும், நடிகர் பிரகாஷின் நடிப்பில் உருவாகிவரும் தி ராஜா சாப் என்ற படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஆண்டாள் கோவில் கருவறைக்குள் சென்ற இளையராஜாவை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
புஷ்பா 1 படத்தில் நடிகை சமந்தாவும், ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா மற்றும் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இவர்களின் சிறப்பு நடனங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அந்த திரைப்படங்கள் வெற்றியடைவதற்கும் ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்தது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா சிவாஜி, சிவகாசி மற்றும் எதிர்நீச்சல் போன்ற படங்களில் சிறப்புப் பாடலுக்கு மாஸாக ஆடியிருப்பார். தற்போது இதையடுத்ததாக தி ராஜா சாப் திரைப்படத்திலும் சிறப்பு நடனமாடுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல்கள் குறித்தது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அல்லு அர்ஜுனை கைது செய்தது நியாயமே இல்லை – நடிகர் சரத்குமார் காட்டம்