5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தேசிய விருது வென்ற மகிழ்ச்சி… குடும்பத்துடன் கொண்டாடிய நித்யா மேனன்!

சமீபத்தில், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதில் சிறந்த நடிகைக்கான விருதை 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றார்.

தேசிய விருது வென்ற மகிழ்ச்சி… குடும்பத்துடன் கொண்டாடிய நித்யா மேனன்!
குடும்பத்துடன் கொண்டாடிய நித்யா மேனன்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Oct 2024 15:55 PM

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைகான விருது வழங்கப்பட்ட நிலையில் நித்யா மேனன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரின் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இதில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியிருந்தது. அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியதோடு, பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் குவித்தது. படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார். ‘திருச்சிற்றம்பலம்’ பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக ‘மேகம் கருக்காதா’ பாடல் வீடியோ தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலுக்கு பட்டி தொட்டி எங்கும் ரீல்ஸ்கள் எடுத்து குவித்தனர் ரசிகர்கள்.

தனுஷ் – அனிருத் காம்போ என்றுமே சூப்பர் ஹிட் காம்போ. அந்த வகையில் தனுஷின் ‘தங்கமகன்’ படத்துக்கு பிறகு ஒரு சிறிய பிரேக்குக்கு பிறகு ‘ திருச்சிற்றம்பலம்’ படத்தின் மூலம் இந்த வெற்றி கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. வழக்கம் போல் இப்படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

படத்தில் வரும் ஹீரோவின் பெயரையே படத்தின் டைடிலாகவே வைத்து விட்டனர். ஒரு சாதாரண உணவு டெலிவரி செய்யும் மனிதனின் வாழ்வில் நடக்கும் காதல்-மோதல்-பாசம் மிகுந்த கதைதான் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கின்றது.

Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டைவிட்டு இன்று வெளியேறப்போவது இவரா? இணையத்தில் கசிந்த தகவல்

இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில்  ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறந்த நடன இயக்குனருக்கான விருதை இப்படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்குதா பெண்ணே பெண்ணே’ பாடலுக்கு கொரியாகிராஃப் செய்த ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட விருது ரத்து செய்யப்பட்டது. சதீஷ் மட்டும் விருதைப் பெற்றார்.

Also read… ஓஹ் க்யூட்டி… நீ ஸ்வீட்டி… ஹேப்பி பர்த்டே பூஜா ஹெக்டே!

சமீபத்தில், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதில் சிறந்த நடிகைக்கான விருதை ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றார்.

விருது வாங்கிய மகிழ்ச்சியை அவரது பெற்றோருடன் பகிர்ந்துக் கொண்டார். அப்பொழுது நித்யா மேனன் தன் பெற்றொருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் புகைப்படங்கள் தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News