Preity Mukhundhan: மலையாளத்தில் அறிமுகமாகும் ஸ்டார் பட நடிகை.. எகிறும் எதிர்பார்ப்பு!
Maine Pyar Kiya: நடிகை ப்ரீத்தி முகுந்தன் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். திருச்சி என்ஐடியில் படித்து பொறியியல் பட்டம் பெற்ற இவர் மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆல்பம் பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அவருக்கு ஸ்டார் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ப்ரீத்தி முகுந்தனுக்கு தெலுங்கில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் கண்ணப்பா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ப்ரீத்தி முகுந்தன்: சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படம் மந்தாகினி. இப்படத்தை ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சஞ்சு உன்னிதான் தயாரித்திருந்தார். இந்த நிறுவனத்தின் அடுத்தப்படத்தை அறிமுக இயக்குனர் ஃபைசல் ஃபாசிலுதீன் இயக்குகிறார். ‘மேனே பியார் கியா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். காதல், நகைச்சுவை, த்ரில்லர் என அனைத்தும் கலந்து உருவாகும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் பைசல் ஃபாசிலுதீன் மற்றும் பில்கேப்சால் எழுதியுள்ளனர். டான்பால் பி ஒளிப்பதிவு செய்ய, அஜ்மல் ஹஸ்புல்லா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணியை கண்ணன் மோகன் மேற்கொள்கிறார். முன்னதாக இந்த படத்தில் இளம் மலையாள நடிகர்களுடன் ஒருசில தமிழ் சினிமா நட்சத்திரங்களும் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read: Crime: காதல் ஜோடியை கடத்திய பெண் வீட்டார்.. தென்காசியில் நடந்த பரபர சம்பவம்!
View this post on Instagram
இப்படியான நிலையில் தான் ப்ரீத்தி முகுந்தன் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நடப்பாண்டு தமிழில் வெளியான ஸ்டார் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். நடிகை ப்ரீத்தி முகுந்தன் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். திருச்சி என்ஐடியில் படித்து பொறியியல் பட்டம் பெற்ற இவர் மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆல்பம் பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அவருக்கு ஸ்டார் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Also Read: Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. 7.25 வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!
இதனைத் தொடர்ந்து ப்ரீத்தி முகுந்தனுக்கு தெலுங்கில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் நடிக்கும் கண்ணாப்பா படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்த நிலையில்தான் மேனே பியார் கியா படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ப்ரீத்தி முகுந்தன் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைத் தொடர்ந்து மலையாளத்திலும் அறிமுகமாவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.