5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Radhika Apte: குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் புகைப்படம்.. ராதிகா ஆப்தேவுக்கு குவியும் பாராட்டு!

சர்வதேச அளவில் பிரபலமான ராதிகா ஆப்தே தனது காதலர் பெனடிக் டெய்லர் என்பவரை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக இந்த தம்பதியினர் வாழ்ந்து வரும் நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராதிகா கடந்த வாரம் குழந்தை பெற்றுக் கொண்டார்.

Radhika Apte: குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் புகைப்படம்.. ராதிகா ஆப்தேவுக்கு குவியும் பாராட்டு!
குழந்தையுடன் ராதிகா ஆப்தே
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 Dec 2024 13:17 PM

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ராதிகா ஆப்தேவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சர்வதேச அளவில் பிரபலமான ராதிகா ஆப்தே தனது காதலர் பெனடிக் டெய்லர் என்பவரை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக இந்த தம்பதியினர் வாழ்ந்து வரும் நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராதிகா கடந்த வாரம் குழந்தை பெற்றுக் கொண்டார். தான் கருத்தரித்ததை வெளியில் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்த அவர் லண்டன் திரைப்பட விழாவிற்கு வருகை தந்த போது தான் குழந்தை பெற போகும் விஷயம் வெளியில் தெரிந்தது.

இந்த நிலையில் தனக்கு ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தை பிறந்ததாக போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ராதிகா ஆப்தே. அதில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. பிறந்த குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்கிற தகவலை ராதிகா ஆப்தே வெளியிடவில்லை. ஆனால் அவரின் நெருங்கிய தோழியான சாரா ஆப்சன்ஸ் சிறந்த பெண்கள் என்று பதிவிட்டுள்ளதன் மூலம் ராதிகா ஆப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ராதிகா ஆப்தேவின் சினிமா வாழ்க்கை

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா ஆப்தே நாடகங்கள் மூலம் தனது கலையுலக வாழ்க்கை தொடங்கினார். அதன்படி 2005 ஆம் ஆண்டு அவர் வா லைஃப் ஹோ தோ ஐசி என்ற நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். இதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு அந்தாகின் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். ராதிகா ஆப்தேவின் குடும்பம் மகாராஷ்டிராவை சேர்ந்த நிலையில் அவரது பெற்றோர் இருவரும் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்தனர். பள்ளியில் படிக்கும் போதே கதக் நடனம் கற்றுக்கொண்ட ராதிகாவுக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு கோமாலா அசலா ஹவா என்ற மராத்தி படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து டி வெயிட்டிங் ரூம் ரத்த சரித்திரம் ரத்த சரித்திரம் 2 , ஐயம், அந்தாதும் லாஸ்ட் ஸ்டோரீஸ், விக்ரம் வேதா, மிஸஸ் அண்டர் கவர், மேரி கிறிஸ்மஸ், சிஸ்டர் மிட் நைட் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Also Read: Vignesh Shivan: அரசு கட்டிடத்தை விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்? நடந்தது என்ன?

தமிழில் அறிமுகம்

ராதிகா ஆப்தேவை 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் தான் தயாரித்து இயக்கிய தோனி படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். இந்தப் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இதன் பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா வெற்றிச்செல்வன் கபாலி சித்திரம் பேசுதடி 2 என தமிழில் சில படங்களில் மட்டுமே ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இதில் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழகமெங்கும் அவர் பிரபலமானார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ,மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், என பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே சர்வதேச அளவில் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் குறும்படங்கள் தொலைக்காட்சி தொடர்கள் வெப் சீரிஸ் என அனைத்து விதமான படைப்புகளிலும் ராதிகா ஆப்தே தனது பங்களிப்பை அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் ராதிகா ஆப்தே வெப் தொடர்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்துவார்.

Also Read:Allu Arjun: சிறையிலிருந்து விடுதலை.. அல்லு அர்ஜூன் எடுக்கப்போகும் முடிவு என்ன?

அவர் தற்போது ஆங்கிலத்தில் லாஸ்ட் டேஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ராதிகா அப்டே தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்

Latest News