ராஷ்மிகா மந்தனா நீச்சல் உடையில் குளித்தாரா? மீண்டும் டீப் பேக் பிரச்சனையில் நடிகை.. உண்மை இதுதான்! - Tamil News | Actress Rashmika Mandanna Falls Prey To Deepfake Video Again Six Months After | TV9 Tamil

ராஷ்மிகா மந்தனா நீச்சல் உடையில் குளித்தாரா? மீண்டும் டீப் பேக் பிரச்சனையில் நடிகை.. உண்மை இதுதான்!

Updated On: 

31 May 2024 11:33 AM

Rashmika Mandanna deep fake: முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் (Deep Fake)   வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. குறிப்பிட்ட அந்த வீடியோவில், கருப்பு உடை அணிந்து நடிகை ராஷ்மிகா லிப்டுக்குள் நுழைகிறார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும், இது போலியான வீடியோ என்றும், இந்த வைரல் வீடியோவில் இருப்பது  ராஷ்மிகா இல்லை. மேலும் ராஷ்மிகாவிற்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் குறல் கொடுத்தனர்.

ராஷ்மிகா மந்தனா நீச்சல் உடையில் குளித்தாரா? மீண்டும் டீப் பேக் பிரச்சனையில் நடிகை.. உண்மை இதுதான்!

ராஷ்மிகா மந்தனா

Follow Us On

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மற்றும் ஒரு டீப் பேக் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா சிவப்பு நிற நீச்சல் உடை அணிந்து ஒரு நீர் வீழ்ச்சியின் கீழே நின்று இருப்பது போன்ற காட்சி உள்ளது. பின்னணியில் ராஷ்மிகா நடித்த புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்ற பாடலும் ஒலிக்கிறது. இந்த வீடியோவை உண்மை என்று நம்பி ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி பதிவுகள் வெளியிட்டனர். அதன்பிறகுதான் போலி வீடியோ என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கண்ணட படங்களில் முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா. தற்போது இந்தி திரையுலகான பாலிவுட்டிலும் தடம் பதித்து நேஷன்ல் கிரஷ் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகிறார். மேலும் இளைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்த இவர், இதை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் அவர் முன்னணியில் இருக்கும் நிலையில் தற்போது அனிமல் என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நடித்திருந்தார்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் (Deep Fake)   வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. குறிப்பிட்ட அந்த வீடியோவில், கருப்பு உடை அணிந்து நடிகை ராஷ்மிகா லிப்டுக்குள் நுழைகிறார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும், இது போலியான வீடியோ என்றும், இந்த வைரல் வீடியோவில் இருப்பது  ராஷ்மிகா இல்லை. மேலும் ராஷ்மிகாவிற்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் குறல் கொடுத்தனர்.

Also read… நடிகை அஞ்சலியை தள்ளிய பாலகிருஷ்ணா.. போதை காரணமா? வைரலாகும் வீடியோ!

மேலும் அந்த நேரத்தில் இதுகுறித்து நடிகை ரஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது போன்ற செயல் தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாகவும், தனது கல்லூரி அல்லது பள்ளி வருவதில் இது போன்று நடந்திருந்தால், அதன் விளைவுகளை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது என்றும். இந்த சம்பவத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேதனையுடன் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து அந்த வீடியோ வெளியிட்ட நபர்கள் என சிலரை போலீசார் கைது செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ராஷ்மிகா மந்தனாவின் மற்றும் ஒரு டீப் பேக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version