நடிகர் ரியாஸ் கான் மீது கேரள நடிகை பாலியல் புகார்

கடந்த 2017-ஆம் ஆண்டு தென்னிந்திய திரையுலகை பரபரப்பால் பற்றி எரிய வைத்தது #MeToo இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களின் பெயர் வெளியாகி டேமேஜ் ஆகியுள்ள நிலையில்,  ஹேமா அறிக்கைக்கு பின்னர் மீண்டும் நடிகைகள் சில நடிகர்களின் பெயரை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.

நடிகர் ரியாஸ் கான் மீது கேரள நடிகை பாலியல் புகார்

நடிகர் ரியாஸ் கான்

Published: 

26 Aug 2024 12:49 PM

பிரபல நடிகர் ரியாஸ் கான் மீது கேரள நடிகை பாலியல் புகார் அளித்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரைத்துறையில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வருவதால், மலையாள சினிமா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு பிறகு நடிகைகள் சிலர் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியான வன்கொடுமைகள் குறித்து மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை ரேவதி சம்பத், தென்னிந்திய திரையுலகில் வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படும் ரியாஸ் கான் மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பரவலான மற்றும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் நீதிபதி ஹேமா குழு அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் இந்த பலாத்கார சம்பவம் நடந்தது என்று வெளியான தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹேமா கமிட்டி வெளியிட்ட தகவல்கள் இந்திய சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த அறிக்கையின் நகல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது.

235 பக்கம் கொண்ட அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஒட்டுமொத்த மலையாள திரையுலகையே சில ஆண்கள்தான் கட்டுப்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் சினிமாவில் பணிபுரியும் மற்ற நபர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சினிமாவில் இந்த நிலை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read… Actor Vijay : விஜய் கட்சி குறித்து பேசிய ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?

கடந்த 2017-ஆம் ஆண்டு தென்னிந்திய திரையுலகை பரபரப்பால் பற்றி எரிய வைத்தது #MeToo இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களின் பெயர் வெளியாகி டேமேஜ் ஆகியுள்ள நிலையில்,  ஹேமா அறிக்கைக்கு பின்னர் மீண்டும் நடிகைகள் சில நடிகர்களின் பெயரை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.

நடிகை ரேவதி சம்பத், நடிகர் ரியாஸ் கான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.ஒரு புகைப்படக் கலைஞர் என் அனுமதி இல்லால் ரியாஷ் கானிடம் என் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து, எனக்கு இரவு ரியாஸ் கானிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது அவர்,​​பாலியல் உறவில் ஆர்வம் உள்ளதா என்று கேட்டதாகவும், வெளிப்படையான கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி தகாத உறவிற்கு அழைத்ததாகவும் கூறியுள்ளார். இது தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?