Actress Sai Pallavi: “எல்லாம் கடவுளுக்கு தெரியும்” – போலியான தகவலுக்கு கொதித்தெழுந்த சாய் பல்லவி!

Ramayana Movie : மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி, தற்போது முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் இருந்து வருபவர் சாய் பல்லவி. இவரின் நடிப்பில் இறுதியாக அமரன் திரைப்படம் வெளியாகிய நிலையில் அதைத்தொடர்ந்து இந்தியில் ராமாயணம் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

Actress Sai Pallavi: எல்லாம் கடவுளுக்கு தெரியும் - போலியான தகவலுக்கு கொதித்தெழுந்த சாய் பல்லவி!

கோப்பு புகைப்படங்கள்

Published: 

12 Dec 2024 12:36 PM

தமிழ்த் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான திரைப்படம் அமரன். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி என இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். அமரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சனங்கள் ரீதியாகவும் ஸ்ரீ பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தெலுங்கில் நாக சைதன்யாவுடன் “தண்டல்” என்ற படத்தில் நடித்துள்ளார்.

தனது சாதாரண நடிப்பின் பல ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இயக்குநர் நிதிஸ் திவாரி இயக்கத்தில் “ராமாயனா” என்ற படத்தில் சீதையாக நடிக்க உள்ளார் சாய் பல்லவி. இந்நிலையில் ராமாயணம் கதைக்களத்துடன் கூடிய இப்படத்தில் நடிப்பதால் அசைவத்திலிருந்து முழுவதுமாக சைவத்திற்கு மாறியதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்காக எங்குச் சென்றாலும் ஒரு சமையல் காரரைக் கூட்டில் செல்வதாகவும் பல செய்திகள் பரவின. இந்நிலையில் அந்த போலியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இணையத்தில் பதிவினை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க:ரஜினிகாந்த் 74-வது பிறந்தநாள்.. விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!

நடிகை சாய் பல்லவி பேஸ்புக் பதிவு

நடிகை சாய் பல்லவி இந்த பதிவில் “பெரும்பாலான சமயங்களில் அல்லது கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் உண்மையற்ற வதந்திகள், தேவையற்ற பொய்கள், தவறான தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த போலியான செய்திகள் எனக்கும் தெரியவந்ததும் நான் அமைதியாகத் தான் இருக்க விரும்புகிறேன். என்னைப் பற்றி எல்லாம் கடவுளுக்குத் தெரியும் என்றும், இவ்வளவு நாளாக நான் அமைதியாக இருந்தது போதும், இனிமேல் போலியான தகவல்களுக்கு எதிர்க்க நேரம் இதுதான்.

ஆனால் இந்த கிசுகிசுக்களை எப்படி நிறுத்தவேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். எனது படங்கள், படங்களில் வெளியிட்டு, எனது சினிமா வாழ்க்கை எல்லாம் என்னுடைய மகிழ்ச்சியான விஷயங்கள் என்றும், அடுத்த முறை என்னுடைய தனிப்பட்ட விஷயங்களிலோ அல்லது என்னைக் குறித்த கிசுகிசுக்களை மக்களிடம் எடுத்துச் செல்வதைக் கடந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தனியார் செய்தி நிறுவனத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

இதையும் படிங்க:விவாகரத்தை அறிவித்த சீனு ராமசாமி.. தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி!

சமீப காலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கிசுசுகிசுக்கள் பேசப்பட்டுவரும் நிலையில், தற்போது அந்த அச்செய்தியை எதிர்த்து நடிகை சாய் பல்லவி இணையத்தில் பதிவினை பகிர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமரன் திரைப்படம் வெளியீட்டைத் தொடர்ந்து இவர் முன்னதாக தெலுங்கு திரைப்படம் ப்ரோமோஷனில் ராணுவ வீரர்களைப் பெற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து #BoycottSaiPallavi என்ற ஹாஸ் டக் இணையத்தில் வைரலாகி வந்தது.

இதையும் படிங்க:ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா 2’ல் இணையும் பிரபல மலையாள நடிகர்!

இதனைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவி ராமாயணம் கதையில் சீதையாக நடிக்கத் தகுதியற்றவர் எனப் பலரும் இணையத்தில் கண்டித்து வந்தனர். இதைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தெலுங்கில் “தண்டல்” என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்தநிலையில், வரும் 2025ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தற்போது ராமரின் புராணக்கதையான ராமாயணம் கதைக்களத்தில் இயக்குநர் நிதிஸ் திவாரி இயக்கத்தில் சீதையாக நடிக்க உள்ளார்.

டிசம்பர் மாதத்தில் நாம் செல்ல வேண்டிய அழகிய சுற்றுலா இடங்கள்!
ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ டிப்ஸ்!
ஒல்லியாக இருப்பவர்கள் இந்த காரணங்களால் எடை அதிகரிப்பது கிடையாது..!
கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் படைத்த டாப் 10 சாதனைகள்..!