Samantha : சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர் கிளப்பிய சர்ச்சை.. கொதிக்கும் ஆந்திரா.. என்ன நடந்தது?

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வருபவர் சமந்தா. தனது குழந்தைதனமான மற்றும் இயல்பான நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தெலுங்கில் ஏ மாயே சேசாவ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக பிரிந்தனர். தற்போது சமந்தா திருமணம் பற்றி முடிவெடுக்காத நிலையில் நாக சைதன்யா விரைவில் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

Samantha : சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர் கிளப்பிய சர்ச்சை.. கொதிக்கும் ஆந்திரா.. என்ன நடந்தது?

கோப்பு புகைப்படம்

Updated On: 

16 Oct 2024 12:35 PM

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிய தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் கொண்டா சுரேகா கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வருபவர் சமந்தா. தனது குழந்தைதனமான மற்றும் இயல்பான நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தெலுங்கில் ஏ மாயே சேசாவ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக பிரிந்தனர். தற்போது சமந்தா திருமணம் பற்றி முடிவெடுக்காத நிலையில் நாக சைதன்யா விரைவில் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் வேறுவேறு பாதையில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்திற்கு காரணம் கே.டி ராமராவ் தான் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இந்த கருத்திற்கு நாக சைதன்யா, அமலா மற்றும் சமந்தா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமே கண்டனம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நாக சைதன்யா, “ விவாகரத்து முடிவு ஒருவர் எடுக்க வேண்டிய மிகவும் வேதனையான மற்றும் துரதிர்ஷ்டவசமான வாழ்க்கை முடிவுகளில் ஒன்றாகும். பல யோசனைகளுக்குப் பிறகு, நானும் எனது முன்னாள் மனைவியும் பிரிந்து செல்ல ஒரு பரஸ்பர முடிவு எடுக்கப்பட்டது. இது எங்கள் வெவ்வேறு வாழ்க்கை இலக்குகளின் காரணமாகவும், இரண்டு முதிர்ந்த பெரியவர்களாக மரியாதையுடனும் கண்ணியத்துடனும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் அமைதியுடன் எடுக்கப்பட்ட முடிவு.

இருப்பினும், இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற மற்றும் முற்றிலும் கேலிக்குரிய கிசுகிசுக்கள் இதுவரை வந்துள்ளன. எனது முந்தைய மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் மீதான ஆழ்ந்த மரியாதை காரணமாக நான் அமைதியாக இருந்தேன்.

இன்று, அமைச்சர் கோண்டா சுரேகாவின் கூற்று பொய்யானது மட்டுமல்ல, அது முற்றிலும் கேலிக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்கள் ஆதரவு மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை மீடியா தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வதும், சுரண்டுவதும் வெட்கக்கேடானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், நடிகை சமந்த தனது பதிவில், “ எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி யூகங்களை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெண்ணாக இருக்க, எழுந்து நின்று போராட.. மிகுந்த தைரியமும் வலிமையும் வேண்டும். கொண்டா சுரேகா, இந்தப் பயணம் என்னை மாற்றியதில் பெருமை கொள்கிறேன்.

ஒரு அமைச்சராக உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மக்களின் தனிப்பட்ட விஷயங்களைக் கையாளும் போது பொறுப்புடனும் மரியாதையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடனும் இணக்கமாகவும் இருந்தது. இதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து எனது பெயரை அரசியல் சண்டைகளில் இருந்து விலக்கி வைக்க முடியுமா?” என தெரிவித்துள்ளார்.


அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்திற்கு, என்டிஆர், நானி போன்ற டோலிவுட் பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் கொண்டா சுரேக்காவின் இந்த கருத்திற்கு அமலா அக்கினேனி, “ ஒரு பெண் அமைச்சர் தீய கற்பனைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது உண்மையிலேயே வெட்கக்கேடானது. தலைவர்கள் தங்களை சாக்கடையில் தாழ்த்திக் கொண்டு குற்றவாளிகளைப் போல நடந்து கொண்டால், நம் நாட்டின் கதி என்ன?

ராகுல் காந்தி, நீங்கள் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டால், தயவுசெய்து உங்கள் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்தி, எனது குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டு உங்கள் அமைச்சர் தனது விஷமத்தனமான அறிக்கைகளை வாபஸ் பெறச் செய்யுங்கள். இந்த நாட்டின் குடிமக்களை பாதுகாக்கவும்” என குறிப்பிட்டுள்ளார்.


கண்டனங்கள் வலுக்கும் நிலையில் அமைச்சர் கொண்டா சுரேகா, “ எனது கருத்துக்கள் ஒரு தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதை கேள்வி கேட்பதற்காகவே தவிர, உங்களை காயப்படுத்துவதற்காக அல்ல.  நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் எனக்கு ஒரு அபிமானம் மட்டுமல்ல.. ஒரு இலட்சியமும் கூட..” என பதில் தெரிவித்துள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!