வேறலெவல்… இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் வொர்க்கவுட் வீடியோ - Tamil News | Actress Samantha Ruth Prabhu workout video goes viral on social media | TV9 Tamil

வேறலெவல்… இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் வொர்க்கவுட் வீடியோ

Published: 

04 Jul 2024 17:32 PM

Samantha Ruth Prabhu: திருமணத்திற்கு பிறகும் அதிக கிளாமரான காட்சிகளில் சமந்தா நடிக்க நாக சைதன்யா விரும்பாததால் இருவரும் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. தாயாக வேண்டாம் என்று சமந்த இந்த முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா.

வேறலெவல்... இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் வொர்க்கவுட் வீடியோ

சமந்தா

Follow Us On

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தரையில் படுத்து உடம்பை வில்லாக வளைத்து வேறலெவலில் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டு உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகினரின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சமந்தா.  இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நானியுடன் ‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் கியூட் நாயகியாக வலம் வரத் தொடங்கினார். பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா என அவர்களுக்கு நாயகியாக நடிக்கத் தொடங்கினார் சமந்தா. இவரது நடிப்பில் தமிழில் வெளியான் கத்தி, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், தெறி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பான் இந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் சமந்தா.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

திருமணத்திற்கு பிறகும் அதிக கிளாமரான காட்சிகளில் சமந்தா நடிக்க நாக சைதன்யா விரும்பாததால் இருவரும் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. தாயாக வேண்டாம் என்று சமந்த இந்த முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா. எனினும் சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக வலம் வந்தார் சமந்தா.

இந்நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் இருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சமந்தா அறிவித்தார். அது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதற்கிடையே திரைப்படங்களில் நடித்துக்கொண்டே சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. ஆனால் ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் இருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

Also read… Cinema Rewind: கமல் படத்துக்கு பெயர் வைத்த ரஜினி.. கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த விஷயம்

சமந்தா இப்போது தன்னுடைய முடிவிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக தமிழில் சில படங்களிலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது தமிழில் விஜய் நடிக்க உள்ள தளபதி 69 திரைப்படத்தில் சமந்தா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எச்.வினோத் இயக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சினிமாவை போல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அண்மையில் தனது சாகச வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு இருந்தார். அதில் உடம்பை வில்லாக வளைத்து தரையில் சாகசம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version