5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தாயாக வேண்டும் என்ற கனவு இப்பவும் இருக்கு – வெளிப்படையாக பேசிய நடிகை சமந்தா

சிகிச்சைகள் முடிந்து தற்போது மீண்டும் சமந்தா நடிக்க தொடங்கியுள்ளனர். சமந்தா தற்போது இயக்குனர் ராஜ் & டி.கே இயக்கியுள்ள 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸ் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வரும் நிலையில் சமீபத்தில் சமந்தா பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில், சமந்தா நிஜ வாழ்க்கையில் தாயாக வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

தாயாக வேண்டும் என்ற கனவு இப்பவும் இருக்கு – வெளிப்படையாக பேசிய நடிகை சமந்தா
நடிகை சமந்தா
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Nov 2024 17:43 PM

சமந்தா ரூத் பிரபு தற்போது சிட்டாடல்: ஹனி பன்னி தொடரின் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தாயாக வேண்டும் என்ற கனவு முதலில் இருந்தே இருப்பதாகவும் தற்போது அந்த கனவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் அதர்வாவின் நடிப்பில் வெளியான பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் நேச்சுரல் ஸ்டார் நானியுடன் ‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் கியூட் நாயகியாக வலம் வரத் தொடங்கினார் சமந்தா. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களுக்கு நாயகியாக நடிக்கத் தொடங்கினார் சமந்தா. சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணம் நடைப்பெற்ற 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு நடிகர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தாயாக வேண்டாம் என்பதற்காக சமந்த இந்த விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா.

தொடர்ந்து சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக நடித்து வந்தார் சமந்தா. பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு தனக்கு மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் இருப்பதாக சமந்தா தெரிவித்தார். அது சமந்தாவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

Also read… கங்குவா படத்தின் குறைவான முன்பதிவுக்கு காரணம் என்ன? தயாரிப்பாளர் விளக்கம்

அந்த நேரத்தில் படங்களில் நடிக்க வாங்கிய முன்பணத்தையும் திருப்பி அளித்தார் சமந்தா. அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கினார். சிகிச்சையின் போதும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார் சமந்தா. சிகிச்சை தொடர்பான படங்களையும் பதிவிட்டு வந்தார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்களும் பிராத்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சைகள் முடிந்து தற்போது மீண்டும் சமந்தா நடிக்க தொடங்கியுள்ளனர். சமந்தா தற்போது இயக்குனர் ராஜ் & டி.கே இயக்கியுள்ள ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Also read… பண்ணையில் கூலி வேலை செய்யும் மோகன்லாலின் மகன் பிரணவ்

இந்த சீரிஸ் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வரும் நிலையில் சமீபத்தில் சமந்தா பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில், சமந்தா நிஜ வாழ்க்கையில் தாயாக வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். வாழ்க்கையில் அந்த கனவுகள் மாறாமல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாயாக மாறுவதற்கு வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.

சமந்தா தான் நடித்த வெப் சீரிஸில் தனக்கு குழந்தையாக நடித்த சிறுமி குறித்து பேசினார், அந்த சிறுமியுடன் நடித்தது தனது சொந்த மகளுடன் பழகுவது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அந்த சிறுமியின் புத்திசாலிதனம், விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமையை கண்டு வியந்ததாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துருந்தார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News