Actress Sangeetha: தமிழ் சினிமாவை விட தெலுங்கு பெட்டர்.. கடுப்பான நடிகை சங்கீதா!
சங்கீதா 1997 ஆம் ஆண்டு மலையாளப்படமான கங்கோத்ரி மூலம் சினிமாவில் அறிமுகமான நிலையில், தமிழில் சூர்யா நடித்த காதலே நிம்மதி மூலம் எண்ட்ரி கொடுத்தார். ரசிகா என்ற பெயருடன் ஆரம்பத்தில் நடித்த அவர் உதவிக்கு வரலாமா, பகவத் சிங், அன்புள்ள காதலுக்கு, டபுள்ஸ், கபடி கபடி என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். பின்னர் 2003 ஆம் ஆண்டில் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தின் சங்கீதா என்ற பெயரில் நடித்தார்.
நடிகை சங்கீதா: தமிழ் சினிமாவில் ஒரே பெயரில் அடுத்தடுத்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு நடிகைகள் படம் நடிக்க வருவார்கள். அதில் ஒருவர் தான் சங்கீதா. 1997 ஆம் ஆண்டு மலையாளப்படமான கங்கோத்ரி மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், தமிழில் சூர்யா நடித்த காதலே நிம்மதி மூலம் எண்ட்ரி கொடுத்தார். ரசிகா என்ற பெயருடன் ஆரம்பத்தில் நடித்த அவர் உதவிக்கு வரலாமா, பகவத் சிங், அன்புள்ள காதலுக்கு, டபுள்ஸ், கபடி கபடி என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். பின்னர் 2003 ஆம் ஆண்டில் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தின் சங்கீதா என்ற பெயரில் நடித்தார். இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து உயிர், தனம், எவனோ ஒருவன், காளை, நாயகன், மன்மதன் அம்பு, தம்பிக்கோட்டை, நான் அவன் இல்லை 2, வணக்கம் சென்னை என பல படங்களில் நடித்தார். கடைசியாக நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: Vastu Tips: வீட்டு பிரச்னைகள் சரியாக தயவுசெய்து இந்த தப்பை பண்ணாதீங்க..!
இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சங்கீதா தான் ஏன் பெருவாரியான தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்பது குறித்து அதிர்ச்சியை உண்டாக்கும் வண்ணம் பல கருத்துகளை தெரிவித்திருந்தார். அதன்படி, “நான் தமிழில் மெனக்கெட்டு படங்கள் பண்ணுவது இல்லை. காரணம் இங்குள்ளதை விட தெலுங்கில் மிக அதிகமாக மரியாதை உள்ளது. அதேபோல் அங்கு வாய்ப்புகளும், சம்பளமும் தமிழை விட சிறப்பாக வழங்கப்படுகிறது. எனக்கு தமிழில் படத்தில் நடிக்க வேண்டும் என சொல்லி போன் செய்தார்கள் என்றால், முதலில் ஒருமாதிரி மரியாதை இல்லாமல் பேசுவார்கள். இரண்டாவதாக அவர்கள் ஏதோ எனக்கு வாழ்க்கை தருவது மாதிரி சொல்லுவார்கள்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகருடன் இணையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்?
நான் என்னமோ இங்க கரண்ட் பில் கூட கட்ட முடியாமல் கஷ்டப்படுவதாக நினைத்து ஃபீல் பண்ணி என்னிடம் பேசுவார்கள். நாங்க உங்களுக்கு சம்பளம் இவ்வளவு பிக்ஸ் பண்ணியிருக்கோம். நீங்க வந்து நடிச்சு கொடுத்துட்டுப் போங்க என சொன்னார்கள். உடனே நான் ஒன்றும் உங்களுக்கு போன் பண்ணி வாய்ப்பு கேட்கவில்லை. நீங்கள் தான் நான் நடிக்க வேண்டும் என சொல்கிறீர்கள். அப்படி பார்த்தால் என்னுடைய மதிப்பு என்னவென்று நான் தான் சொல்ல வேண்டும். ஆனால் அவர்களை அதை மறுப்பது போல பேசுவார்கள். எனக்கு அந்த மாதிரி யாராவது பேசினால் பிடிக்காது. எனக்கு உண்டான மரியாதையை அவர்கள் கொடுக்க வேண்டும்” என சங்கீதா பேசியிருந்தார். அவரின் கருத்துகள் திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.