Cinema Rewind: எம்டன் படத்தில் இது எனக்கு பிடிக்கவே இல்லை… சரண்யா பொன்வண்ணன்

Actress Saranya Ponvannan: நாயகியாய் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சரண்யா பின் ‘சீவலப்பேரிபாண்டி’, ‘கருத்தம்மா’, ’பசும்பொன்’ என பல திரைப்படங்களில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனம் கவர்ந்தார். குறிப்பாக ‘ராம்’, ‘தவமாய் தவமிருந்து’ போன்ற சீரியஸ் படங்களில் சரண்யா தன்னுடைய அபாரமான நடிப்பால் முத்திரை பதித்து ’அம்மா கதாபாத்திர’ அரியணையில் அழகாய் அமர்ந்தார்.

Cinema Rewind: எம்டன் படத்தில் இது எனக்கு பிடிக்கவே இல்லை... சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன்

Published: 

10 Aug 2024 18:25 PM

நடிகை சரண்யா பொன்வண்ணன் தான் நடித்த எம்டன் மகன் படத்தில் ஒரு காட்சியை விருப்பமே இல்லாமல் நடித்ததாகவும் ஆனால் அதுதான் விருது வாங்க வழி வகுத்ததாகவும் முந்தைய பேட்டி ஒன்றில் கூறியது வைரலாகி வருகின்றது. இன்றைய தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களின் அம்மா என்றால் உடனே நியாபகத்திற்கு வருபவர் சரண்யா பொன்வண்ணன் தான். தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்திற்கு நிரந்தர நாற்காலி போட்டு அமர்ந்திருப்பவர் சரண்யா பொன்வண்ணன். இப்போது அம்மா வேடங்களில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் இவர் 80களில் தமிழ் சினிமாவின் நாயகிகளில் ஒருவர். தன் அறிமுக திரைப்படத்திலேயே கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்த இவரைப் பார்த்து வியந்தது தமிழ் சினிமா. அது வேற எந்த படமும் இல்லை இன்றும் தமிழ் ரசிகர்களால் கல்ட் மூவி என கொண்டாப்படும் நாயகன் படம் தான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சரண்யா பொன் வண்ணன், உலகநாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக நாயகன் படத்தில் நடித்திருந்தார். அவர் தமிழில் அறிமுகமான முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் இரட்டை ஜடை போட்டுக்கொண்டு பாவாடை சண்டையில் அழகு பதுமையாக வந்த இவர், தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார். ‘நாயகன்’ படத்தில் கமலின் மனங்கவர்ந்த நாயகியாக நடிப்பைத் தொடங்கிய சரண்யா சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ‘செஞ்சுரி அடித்துவிட்டார். தமிழ் சினிமாவின் பாசமான அம்மா என்று விருது கொடுக்கும் அளவுக்கு அம்மா வேடத்தில் அசத்தி வருகிறார் சரண்யா பொன்வண்ணன்.

நாயகியாய் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சரண்யா பின் ‘சீவலப்பேரிபாண்டி’, ‘கருத்தம்மா’, ’பசும்பொன்’ என பல திரைப்படங்களில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனம் கவர்ந்தார். குறிப்பாக ‘ராம்’, ‘தவமாய் தவமிருந்து’ போன்ற சீரியஸ் படங்களில் சரண்யா தன்னுடைய அபாரமான நடிப்பால் முத்திரை பதித்து ’அம்மா கதாபாத்திர’ அரியணையில் அழகாய் அமர்ந்தார். அதேசமயம் மோகன்லால், ரஜினி ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடிக்காதது தனக்கு ஒரு குறையாக உள்ளது. ஆனாலும் அவர்களுடன் நடித்தால் ஜோடியாக மட்டுமே நடிப்பேன் என்று சில பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

Also read… கோலிவுட், மோலிவுட்டை கலக்கும் நடிகை இந்த சிறுமி… யார் சொல்லுங்க பாப்போம்

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவான எம்டன் மகன் திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இதில் கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன் வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் இன்னும் பலரது பேவரைட் லிஸ்டில் உள்ளது.

இந்தப் படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து முன்னதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசியது வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தில் கோவிலில் அங்க பிரதட்சனம் செய்வது போல ஒரு காட்சி உள்ளது. அது குறித்து பேசிய சரண்யா, அந்த காட்சியில் ரோட்டில் உருள வேண்டும் என்று இயக்குநர் சொன்னபோது முதலில் நான் மறுத்தேன். வடிவேலு தான் அந்த காட்சியை செய்வதாக இயக்குநரிடம் சொன்னார். ஆனால் இயக்குநர் நான் தான் அந்த காட்சியில் நடிக்க வேண்டு அது எனக்காக எழுதப்பட்ட காட்சி என்று கூறினார். இயக்குநர் என்னிடம் வந்து வடிவேலு இந்த காட்சி நடிப்பதாக கூறுகிறார். இது அவருக்கு சுலபமான விசயம் சூப்பரா நடிச்சுட்டு போயிடுவாரு ஆனா இது நீங்க நடிச்சாதான் நால்ல இருக்கும் என்று என்னிடம் கட்டாயப்படுத்தினார்.

ரோட்டில் உருளுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த காட்சி மிகவும் கஷ்டப்பட்டுதான் நடித்தேன் ஆனால் அந்த படத்திற்காகதான் நான் மாநில விருது வாங்கினேன் என்றும் அந்த வீடியோவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?