மேனேஜர்கள் என்னை பயன்படுத்திக்கொண்டனர்… நடிகை ஷாலினி பாண்டே வேதனை
Actress Shalini Pandey: தற்போது இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் 'மகாராஜ்' திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை ஷாலினி பாண்டே. இத்திரைப்படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஷாலினி பாண்டே, தனது ஆரம்பக் காலத்தில் 'அர்ஜூன் ரெட்டி' திரைப்படத்தில் நடிக்கும்போது, தான் உருவக் கேலிகளுக்குள்ளனதாக வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
தனக்கு மொழி பிரச்னை இருப்பதை தனது மேனேஜர்கள் பயன்படுதிக் கொண்டனர் என்று நடிகை ஷாலினி பாண்டே வேதனை தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் ‘அர்ஜூன் ரெட்டி’. இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனவர் ஷாலினி பாண்டே. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தனது முதல் படத்திலே ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார். தமிழில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’, மாதவன் நடித்த ‘சைலன்ஸ்’ படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷாலினி பாண்டே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் இப்போது, ‘மகாராஜ்’ என்ற இந்திப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷாலினி பாண்டே தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
‘அர்ஜூன் ரெட்டி’ படம் இந்தியில் ‘கபீர் சிங்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடித்திருந்தனர். ஆனால், கியாரா அத்வானிக்கு கிடைத்த புகழ், ஷாலினி பாண்டேவுக்கு கிடைக்கவில்லை. இதற்கு, உருவக் கேலிக்கு தான் ஆளானதுதான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் ‘மகாராஜ்’ திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை ஷாலினி பாண்டே. இத்திரைப்படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஷாலினி பாண்டே, தனது ஆரம்பக் காலத்தில் ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தில் நடிக்கும்போது, தான் உருவக் கேலிகளுக்குள்ளனதாக வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
Also read… கார்த்தியின் ‘மெய்யழகன்’ ரிலீஸ் எப்போது? சூப்பர் அப்டேட் இதோ!
அவர் பேசியதாவது, அர்ஜூன் ரெட்டி படத்தில் நடிக்கும் போதும் பிறகும் உருவக் கேலிகளை எதிர்கொண்டேன். அப்போது நான் கொஞ்சம் அதிக எடை கொண்டிருந்தேன். உடல் ஆரோக்கியத்துடன் சம்மந்தப் பட்டதுதான், ஃபிட்னஸ். உடல் தோற்றத்துடன் சம்மந்தப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு தென்னிந்திய மொழிகள் தெரியவில்லை என்பதால், ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். என் மானேஜர்கள் என்னுடைய அப்பாவித்தனத்தை தவறாகப் பயன்படுத்தி சில திரைப்படங்களில் நடிக்கச் சொல்லி ஏமாற்றினர். அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தது என்னுடைய குடும்பம் தான் என்றும் ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.