பாலிவுட் நடிகருடன் ஜோடி போடும் த்ரிஷா…! - Tamil News | Actress Trisha pair with bollywood actor salmaan khan | TV9 Tamil

பாலிவுட் நடிகருடன் ஜோடி போடும் த்ரிஷா…!

Published: 

16 Jul 2024 14:20 PM

Actress Trisha: பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் திரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு அவர் தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.

பாலிவுட் நடிகருடன் ஜோடி போடும் த்ரிஷா...!

த்ரிஷா

Follow Us On

நடிகை த்ரிஷா பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர்கள் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி என்ற படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரே ஒரு காட்சியில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை த்ரிஷா. அதன் பிறகு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் நாயகியாக உருவெடுத்தார். அதைத்தொடர்ந்து விக்ரம் உடன் சாமி, விஜய் உடன் கில்லி, மாதவன் உடன் லேசா லேசா, திருப்பாச்சி, சூர்யாவுடன் ஆறு, சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து தமிழில் தவிர்க்க முடியாத முன்னணி நாயகியாக முன்னேறினார். அதன் பிறகு ரசிகர்களால் சவுத் குயின் என அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் தான் த்ரிஷா.

முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நாயகியாக கலக்கி வருகின்றார் த்ரிஷா. இதற்கிடையில் த்ரிஷா ஒரு சில தொடர் தோல்வி படங்களில் நடித்திருந்தாலும் அவ்வப்போது மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து தரமான கம்பேக் கொடுத்து வருகின்றார்.

Also read… பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரிக்காக சாட்சி சொல்லும் மயூ… அதிர்ச்சியில் ராதிகா

பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் திரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு அவர் தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.

த்ரிஷா நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. இந்த நிலையில் பாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் The Bull எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் சல்மான் கானின் ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
மாதுளை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடலுக்கு நீர்ச்சத்துடன் நார்ச்சத்தை வழங்கும் முள்ளங்கி.. பலன்கள் ஏராளம்..!
சர்வதேச கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை எப்படி..?
Exit mobile version