5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actress Vindhya: வாழ்க்கையில் சரிவு.. கைகொடுத்த ஜெயலலிதா.. விந்தியா நெகிழ்ச்சி!

எனக்கு அம்மா என சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். ஏன் அப்படி என கேட்டால் அந்த மாதிரி எல்லாம் அமைந்து விட்டது. என் அம்மாவை விட அவர்களை அதிகம் பிடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. நான் 17 வயதிலேயே வெற்றியை எல்லாம் பார்த்து விட்டேன். நடிகையானேன், பிரபலமானேன். ஆனால் 2008 ஆம் ஆண்டில் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது.

Actress Vindhya: வாழ்க்கையில் சரிவு.. கைகொடுத்த ஜெயலலிதா.. விந்தியா நெகிழ்ச்சி!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 12 Sep 2024 11:00 AM

நடிகை விந்தியா: சங்கமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் விந்தியா. இன்று சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக இருக்கும் விந்தியாஒரு நேர்காணலில் ஜெயலலிதா பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அதில் பேசிய அவர், ”அம்மாவுக்கு பிடித்த உணவு எது? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு எந்த அம்மாவை கேட்கிறீர்கள் என அவர் பதில் கேள்வி எழுப்பினார். எனக்கு அம்மா என சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். ஏன் அப்படி என கேட்டால் அந்த மாதிரி எல்லாம் அமைந்து விட்டது. என் அம்மாவை விட அவர்களை அதிகம் பிடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. நான் 17 வயதிலேயே வெற்றியை எல்லாம் பார்த்து விட்டேன். நடிகையானேன், பிரபலமானேன். ஆனால் 2008 ஆம் ஆண்டில் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. உடல் எடை அதிகரித்தது. 17 வயதில் நடிக்க வந்ததால் பெரிதாக படிக்கவும் இல்லை. இதனால் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என நினைத்த சமயத்தில் தான் அரசியலுக்கு வந்தேன்.

Also Read: Nirmala Sitharaman: ஜிஎஸ்டியால் கடை நடத்த முடியல.. நிர்மலா சீதாராமனிடம் புலம்பிய தொழிலதிபர்!

2006 ஆம் ஆண்டிலேயே நான் அரசியலில் இணைந்தாலும் பெரிதாக பேச கற்றுக்கொள்ளவில்லை. ஒரு நடிகை மாதிரி இரட்டை விரலை காட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தேன். பெரிதாக எதுவும் செய்யவில்லை.2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. என்னை பிரச்சாரத்துக்கு போக சொன்னார்கள். ஆனால் எனக்கு மன அழுத்தமாக இருக்கிறது. பிரச்சாரம் செய்யும் எண்ணமில்லை என சொன்னேன். ஜெயலலிதா என்னிடம் மக்களைப் பார்த்தால் எல்லாம் சரியாகி விடும் என சொன்னார்கள்.

அவரின் பேச்சைக் கேட்டு பிரச்சாரம் சென்றேன். அரசியல் களத்தில் திமுகவினரிடம் இருந்து கொலை மிரட்டல்கள், ஆபாச பேச்சுக்கள் எல்லாம் வந்தது. அப்போது ஒரு வெறியில் தமிழ் கற்றுக்கொண்டேன். நான் ஜெயித்துக் காட்ட வேண்டும் என நினைத்தேன். நான் என் தனிப்பட்ட வாழ்க்கையை மறந்த நாளில் மிக அதிகமான மகிழ்ச்சியுடன் காணப்பட்டேன். 2009, 2010 ஆம் ஆண்டில் இருந்து அரசியல் மற்றும் தமிழ் மொழி மீது அதிக கவனம் செலுத்தினேன். அதிமுக பற்றி தெரிந்ததை விட திமுகவைப் பற்றி தெரிய வேண்டும் என்பதற்காக நிறைய படித்தேன். 2011ல் நான் பிரச்சாரத்துக்கு செல்லாத மாவட்டமே கிடையாது. எல்லா இடங்களுக்கும் சென்றேன். அதிமுக ஆட்சி அமைந்தது. என்னுடைய வாழ்க்கையின் கருப்பு பக்கத்தில் என்னுடன் இருந்தவர், அவரின் மகளாக என்னைப் பார்த்தவர் ஜெயலலிதா தான். நான் பிரச்சாரத்தில் யாரை தாக்கி பேச வேண்டும் என சொல்லுவார். அதேசமயம் சரியான போலீஸ் பாதுகாப்பு கொடுப்பார். என்னுடைய வாழ்க்கையில் சிறந்த காலம் அது. ஜெயலலிதாவுக்கு பொய் சொன்னால் பிடிக்காது. சொன்னதை செய்தால் போதும். சொந்தமாக செய்தால் திட்டுவார்கள். அதேசமயம் பாராட்ட வேண்டும் என்றால் மிகவும் வெளிப்படையாக பாராட்டுவார்.

Also ReadHappy Birthday Vadivelu: காமெடி உலகின் மாமன்னன்.. நடிகர் வடிவேலு பிறந்தநாள் இன்று!

என்னுடைய தேர்தல் களத்தில் மிகச்சிறந்த பிரச்சாரம் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தான். அப்போது எல்லார் முன்னாடியும் தலைமைச்செயலகத்தில் என்னை பாராட்டினார். தேர்தலில் நீ சிறப்பாக பணியாற்றியதாக தெரிவித்தார். ஜெயலலிதா மிகப்பெரிய சாப்பாட்டு பிரியை. எந்த ஹோட்டலில் என்ன என்ன சிறப்பாக இருக்கும் என்பது அவருக்கு தெரியும். காலையிலேயே எனக்கு இது வேண்டும் என பேப்பரில் எழுதிக் கொடுத்து விடுவார்கள். அவ்வளவு எளிதாக ஜாலியாக இருப்பார்கள். எல்லாருக்கும் மரியாதை கொடுத்து சாந்தமாக இருப்பார்கள். அவரிடம் நான் பார்த்து ஆசைப்பட விஷயம். நானும், சிம்ரனும் ஒரே நாளில் கட்சியில் இணைந்தோம்.

சென்னையில் கட்சிக்கு வருமாறு அழைத்த நிலையில் விழுப்புரத்தில் தான் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவரின் நடை மணப்பெண் நடை மாதிரி அவ்வளவு அழகாக இருந்தது. நான் கட்சியில் சேர்ந்த 2006 தேர்தலில் தோற்று விட்டோம். அதன்பிறகு போயஸ் கார்டனில் சந்தித்தேன். அங்கு ஜெயலலிதாவைப் பார்த்ததும் திருப்பதி பெருமாளைப் பார்ப்பது போல இருந்தது. என்னிடம் என்ன ஐடியா என கேட்கவும், நான் படம் எடுக்கப்போவதாக சொன்னேன். ஆனால் அதெல்லாம் வேண்டாம். அப்படி செய்ய மாட்டேன் என சத்தியம் செய்ய சொன்னார்கள். நான் அவரின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து எடுக்கவில்லை” என விந்தியா தெரிவித்தார்.

Latest News