அடேங்கப்பா… நடிகை நயன்தாராவின் வாட்ச் இத்தனை லட்சமா?
இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் நடிகை நயன்தாரா அணிந்திருந்த வாட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் நடிகை நயன்தாரா அணிந்திருந்த வாட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா தொடர்ந்து பல்வேறு வெற்றித்திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அதே நேரத்த்தில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் வாங்கிய நிலையில் தற்போது Femi 9 என்ற சானிட்டரி நாப்கின் தயாரிப்புகளையும் மேற்கொண்டு வருகிறார்.
கோலிவுட்டில் ஜயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய நயன்தாரா, தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். கடைசியாக பாலிவுட்டிலும் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் திரைப்படத்திலும் நடித்தார். வசூல் ரீதியாக 1000 கோடி கலெக்ஷன் பெற்று ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட வாழ்க்கையில், நிறைய கஷ்டங்களை அனுபவித்த நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த நிலையில், இரட்டை குழந்தைகளுடன் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில், நடைபெற்ற இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் நயந்தாரா அணிந்திருந்த வாட்ச்சின் விலை இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனது கணவர் விக்னேஷ்சிவனுடன் திருமண நிகழ்ச்சியில் பிங்க் நிற புடவையில், வெள்ளி நிற ஸ்டோன் நெக்லெஸ் உள்ளிட்டவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதோடு திருமண ரிஷப்னில் நடிகை நயன்தாரா ஒரு ஆடம்பர வாட்ச் அணிந்து வந்தார், அது அனைவரையும் கவர்ந்தது. அவர் அணிந்த வாட்ச் ரோலக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல் 36. பிங்க் நிற டயல் மற்றும் சிப்பி பிரேஸ்லெட் கொண்டது. அதோடு திருமண ரிசப்ஷனில் நடிகை நயன்தாரா ஒரு ஆடம்பர வாட்ச் அணிந்து வந்தார், அது அனைவரையும் கவர்ந்தது. அவர் அணிந்த வாட்ச் ரோலக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல் 36. பிங்க் நிற டயல் மற்றும் சிப்பி பிரேஸ்லெட் மாடலைக் கொண்டது.
Oystersteel என்ற உலோகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த வாட்ச் எப்போதும் மினுமினுப்புடன் கண்களைப் பறிக்கும் அழகுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும், இந்த வகையான வாட்ச்சின் ஆரம்ப விலை ரூ.5.30 லட்சம் என்றும், இந்த வாட்ச் எப்போதும் மங்காமல் மினுமினுப்புடன் இருக்கும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது. தற்போது இணையவாசிகள் நயன்தாராவின் வாட்ச்சின் பெயரை கூகுளில் தேடி, அம்மாடியோவ் என்று பெருமூச்சு விடுகின்றனர். நயன்தாரா அணிந்திருந்த வாட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.