தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… இணையத்தில் கவனம்பெறும் வொண்டர்பார் நிறுவனத்தின் ஸ்டோரி!
இந்த நிலையில் இன்று இவர்களது வழக்கின் இறுதி விசாரணை நடைப்பெற்றது. அதில் சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இந்த செய்தி இணையத்தில் வெளியான நிலையில் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு கவனம் பெற்று வருகின்றது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த விவாகரத்து வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வங்கியது நீதிமன்றம். அதன்படி சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கிய நிலையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார் தனுஷ். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் 18 வருட தாம்பத்திய வாழ்க்கையில் இருந்து விலகுவதாக 2022-ம் ஆண்டு அறிவிப்பை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து பல சர்ச்சைகளும் கிசுகிசுகளும் இணையத்தில் உலா வந்துகொண்டே இருந்தது. அவர்களை இணைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவியது.
இயக்குநர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் கடைக்குட்டி மகனாக 1983-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிறந்தவர் நடிகர் தனுஷ். வெங்கடேஷ் பிரபுவான இவரை நடிகர் தனுஷ் என மாற்றியது அவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் தான். கடந்த 2002-ம் ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ படம் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமானார்.
‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானபோது ஒல்லியான உடம்புடன் ஒருவன் ராணுவ உடை அணிந்து கொண்டு ஒட்டு மீசையுடன் வந்து நிற்கிறான் என்று பல கேலிகளுக்கு ஆளான ஒருவர் ஹாலிவுட் வரை பிரபலமானது பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இரண்டாவதே தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படம் தனுஷை தமிழ் ரசிகர்களின் மனதில் நடிகராக பதியவைத்தது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனைத்து படங்களும் ஹிட் அடித்த நிலையில் அதனை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் வெற்றி மாறன் உடன் கூட்டணி வைத்தார். இந்த இரண்டு கூட்டணிகளும் தனுஷின் சினிமா வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
Also read… திருமணத்தை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்… இணையத்தை கலக்கும் காதலர் போட்டோ!
இந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார் தனுஷ். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் 18 வருட தாம்பத்திய வாழ்க்கையில் இருந்து விலகுவதாக 2022-ம் ஆண்டு அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில் 18 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு மனம் ஒத்து பிரிவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தியது. அவர்களை இணைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் இரண்டு வருடங்களாக இவர்களின் விவாகரத்து வழக்கு விசாரணை அவ்வப்போது நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இவர்களது வழக்கின் இறுதி விசாரணை நடைப்பெற்றது. அதில் சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இந்த செய்தி இணையத்தில் வெளியான நிலையில் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு கவனம் பெற்று வருகின்றது.
Also read… கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா – ஜோதிகா
அதன்படி தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், விஸ்வாசம் படம் மூலம் பிரபலமடைந்த அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், ப்ரியா வாரியர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இளைஞர்களின் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்திலிருந்து சமீபத்தில் ’காதல் பெயில்’ என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் 6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது தொடர்பான ஸ்டோரியை வொண்டர்பார் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தனுஷின் விவாகரத்து அறிவிப்பு வெளியான நிலையில் இந்த ‘காதல் பெயில்’ ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகின்றது.