சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவிற்கு உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகை - Tamil News | After Simbu actress aishwarya rajesh sends money to Venga Rao | TV9 Tamil

சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவிற்கு உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகை

காமெடி நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து கமெடியில் கலக்கியுள்ள நடிகர் வெங்கல் ராவ் தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த சிம்பு அவருக்கு 2 லட்சம் பணக் கொடுத்து உதவிய நிலையில் அவரைத் தொடர்ந்து பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவிற்கு உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகை

வெங்கல் ராவ்

Published: 

28 Jun 2024 12:09 PM

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக நடிகர் வெங்கல் ராவ் வீடியோ வெளியிட்ட பிறகு அவருக்கு முதல் ஆளாக சிம்பு பண உதவி செய்த பிறகு பிரபலங்கள் பலர் அவருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய வெங்கல் ராவ், ஒரு கட்டத்தில் சண்டைக்கு உடல் ஒத்துழைக்காததால், காமெடி நடிகராக வடிவேலுவின் குழுவில் இணைந்தார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். இவர் வடிவேலுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்நிலையில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை என்றும் பேசக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறேன். சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்க என வெங்கல் ராவ் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ஸ்டண்ட் மேனாக இருந்த வெங்கல் ராவ் சண்டைக் காட்சியின் போது காயம் ஏற்பட்ட நிலையில், இனிமேல் ஸ்டண்ட் வேண்டாம் நடிகராக மாறிவிடலாம் என நினைத்த அவர் 1995ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் பிரபு நடித்த கட்டுமரக்காரன் படத்தில் நடிகராக மாறினார். அதன் பின்னர் வடிவேலு ட்ரூப்பில் இணைந்த அவர் அவருடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கடைசியாக வடிவேலு மீண்டும் நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடித்திருந்தார்.

வடிவேலுவின் காமெடி காட்சிகள் ஹிட்டாக அவருடன் நடித்த சிங்கமுத்து, போண்டா மணி, வெங்கல் ராவ், அல்வா வாசு, பாவா லட்சுமணன் போன்ற சக நடிகர்களின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. இருப்பினும் வடிவேலு அளவுக்கு அவர்களால் முன்னணி நகைச்சுவை நடிகர் அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை. வடிவேலுவுடன் தலைநகரம், எலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வெங்கல் ராவ் ஒரு படத்தில் தலையில் இருந்து கையை எடுத்தால் கடித்துவிடுவேன் என்று சொல்லும் ஒரு காமெடி காட்சி இன்றுவரை பேசப்படும் ஒரு காட்சியாக அமைந்துள்ளது.

Also read… TVK Vijay : அரசியல்.. போதைப்பொருள்.. மாணவர்கள் சந்திப்பில் விஜய் பேசிய முழு விவரம்!

காமெடி நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து கமெடியில் கலக்கியுள்ள நடிகர் வெங்கல் ராவ் தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில் நடிகர் வெங்கல் ராவ்வின் சிகிச்சைக்கு நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தார்.

அதனை தொடர்ந்து நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாய் அவருக்கு அனுப்பி இருக்கிறாராம். மேலும் விஜய் டிவி KPY பால ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவின் சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!