5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vidaamuyarchi: விண்டேஜ் லுக்கில் அஜித் – த்ரிஷா… வெளியானது போஸ்டர்!

Vidaamuyarchi Movie Update: நடிகர் அஜித்குமார் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அடுத்தடுத்த இரு படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

Vidaamuyarchi: விண்டேஜ் லுக்கில் அஜித் – த்ரிஷா… வெளியானது போஸ்டர்!
அஜித் – த்ரிஷா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Sep 2024 09:16 AM

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் மூன்றாவது பார்வை போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் அஜித், துணிவு படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு 70 முதல் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு மாத காலம் அசர்பைஜானில் நடத்தப்பட உள்ள நிலையில் கடந்த மாத இறுதியில் அஜித், அசர்பைஜான் புறப்பட்டு சென்றதை பார்க்க முடிந்தது.

நடிகர் அஜித்குமார் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அடுத்தடுத்த இரு படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் சமீபத்தில் வெளியானது. ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்ட அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மைத்ரீ மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. ஒரு மாதம் நடந்த அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

Also read… OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் என்ன புதுவரவு… லிஸ்ட் இதோ

மேலும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது. இந்த சூட்டிங்கில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அது சம்பந்தமான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. டம் தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடப்பட்டு வருவதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனை அஜித் ரசிகர்கள் ’தல’ தீபாவளி இந்த வருடம் என்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது படத்தின் புதி போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மற்றும் திரிஷா இடம் பெற்றுள்ளனர். அஜித் சில வருடங்களாக சால்ட் அண்ட் பெப்பெர் மற்றும் முழு வெள்ளை முடியுடன் தான் காணப்படுகிறார். அஜித்தின் விண்டேஜ் லுக்கில் காணப்படுவதால் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Latest News