பாயல் கபாடியா படத்துக்கு கான் திரை விழாவில் உயரிய ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது!

All We Imagine As Light: கான் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கடந்த மே 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடந்தது. இதில் எழுத்தாளரும் இயக்குநருமான பாயல் கபாடியாவின் முதல் முழுநீள திரைப்படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்' போட்டியிட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா சார்பாக கான் திரைப்படம் விழாவுக்குத் தேர்வாகியுள்ள ஒரே படம் இது.

பாயல் கபாடியா படத்துக்கு கான் திரை விழாவில் உயரிய ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது!

பாயல் கபாடியா படத்துக்கு கான் திரை விழாவில் விருது

Published: 

26 May 2024 14:06 PM

பிரான்ஸ் நாட்டில் 77-வது ‘கான் திரைப்பட விழா’ 14-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. புகழ்பெற்ற இந்த திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் 7 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த விழாவில் இந்திய நடிகைகள் கலந்துகொண்டு சிவப்புக் கம்பள அணிவகுப்பை அலங்கரித்து வருகின்றனர். இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் இருந்து வரும் நடிகர், நடிகைகள் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் உடைகளை அணிந்து, சிவப்பு கமபலத்தில் நடந்து வந்து தங்களை வெளிப்படுத்துவது வழக்கம். இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான ‘கிரண்ட் பிரிக்ஸை’ இந்திய திரைப்படமான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” வென்றுள்ளது.

கான் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கடந்த மே 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடந்தது. இதில் எழுத்தாளரும் இயக்குநருமான பாயல் கபாடியாவின் முதல் முழுநீள திரைப்படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ போட்டியிட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா சார்பாக கான் திரைப்படம் விழாவுக்குத் தேர்வாகியுள்ள ஒரே படம் இது. மேலும் இந்தியா சார்பாக இந்தப் பிரிவில் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே பெண் பாயல் கபாடியா என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையின் வாழும் இரண்டு பெண்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் திரையிடல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரியாணி படத்தின் மூலம் கவனமீர்த்த கனி குஸ்ருதி இப்படத்தில் நடித்துள்ளார்.

Also read… OTT Release: ஓடிடியில் வெளியாகும் ‘வருஷங்களுக்கு சேஷம்’ படம்… எப்போது தெரியுமா?

இப்படத்துக்கு கான் விழாவில் தங்கப்பனை விருதுக்கு அடுத்த உயரிய விருதாக கருதப்படும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் திரையிடலுக்குப் பிறகு பார்வையாளர்கள் எழுந்து நின்று 8 நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து பேசிய படத்தின் இயக்குநர் பாயல் கபாடியா, “ இந்தியா பல நல்ல படங்களை உருவாக்கி வருகிறது. எங்கள் படத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு பிறகு அங்கீகாரத்திற்காக அடுத்த 30 ஆண்டுகள் இந்தியா காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?