Allu Arjun Bail: ஜாமீனில் வெளிவந்த அல்லு அர்ஜூன்.. உயர் நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
Allu Arjun: முதலில் நடிகர் அல்லு அர்ஜூனை சிக்கட் பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அங்கிருந்து காந்தி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.
தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் கைது வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் நம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் அல்லு அர்ஜூனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. கடந்த டிசம்பர் 4ம் தேதி புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சியின்போது சந்தியா திரையரங்கில் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து, நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா திரையரங்க உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சிக்கடப்பள்ளி காவல்துறையினர் அல்லு அர்ஜூனை இன்று (டிசம்பர் 13) கைது செய்தனர்.
ALSO READ: Mohan Babu: செய்தியாளர்களை தாக்கிய விவகாரம்.. ஆடியோ வெளியிட்டு மோகன் பாபு வருத்தம்!
முதலில் நடிகர் அல்லு அர்ஜூனை சிக்கட் பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அங்கிருந்து காந்தி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு, நம்பள்ளி நீதிமன்றத்தில் அல்லு அர்ஜூன் ஆஜர்படுத்தப்பட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நம்பள்ளி நீதிமன்றம் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக சஞ்சல் குடை சிறையில் அடைக்கப்பட்டார்.
ALSO READ: Hyderabad: ரூம் முழுக்க காலணிகள்.. ஷூக்களை திருடி விற்பனை செய்த தம்பதி!
எதிர்பாராத திருப்பம்:
Telangana High Court grants interim bail to Allu Arjun for 4 weeks!
Bail granted based on judgments relied upon, effective for 4 weeks from the date of order receipt.
Actor gains temporary relief as investigations continue#AlluArjun #Pushpa2 pic.twitter.com/4vLRLsNRk6— Nabila Jamal (@nabilajamal_) December 13, 2024
அல்லு அர்ஜூன் சிறைக்கு செல்லும் அதே நேரத்தில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நடந்தது. அதாவது, அல்லு அர்ஜூனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதாவது, அல்லு அர்ஜூன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். அதில், அல்லு அர்ஜூன் தன் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, அல்லு அர்ஜூன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜூன் சார்பில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி வாதிட்டார்.