5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Allu Arjun: அதனால்தான் நேரில் வரவில்லை.. சிறுவன் உடல்நிலை குறித்து அல்லு அர்ஜூன் ட்வீட்!

Allu Arjun tweet: புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் ஒருபுறம் கைது, ஜாமீன், விடுதலை என பல்வேறு சிக்கல்களில் உள்ள நிலையில், தற்போது ஸ்ரீதேஜ் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியது.

Allu Arjun: அதனால்தான் நேரில் வரவில்லை.. சிறுவன் உடல்நிலை குறித்து அல்லு அர்ஜூன் ட்வீட்!
அல்லு அர்ஜூன் (Image: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 15 Dec 2024 23:18 PM

புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோவில் 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும், அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த பத்து நாட்களாக மருத்துவமனையில் ஸ்ரீதேஜ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும், குறிப்பாக நேற்று முதல் ஸ்ரீதேஜ் உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் ஒருபுறம் கைது, ஜாமீன், விடுதலை என பல்வேறு சிக்கல்களில் உள்ள நிலையில், தற்போது ஸ்ரீதேஜ் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் ஸ்ரீதேஜின் உடல்நிலை குறித்து அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் கவலையுடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ALSO READ: ஷாக் ஆன ஷாருக்கான்.. வசூல் வேட்டையில் புஷ்பா-2.. பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் லீக்!

அல்லு அர்ஜூன் கவலை:

இந்த நிலையில் ஸ்ரீதேஜின் உடல்நிலை குறித்து அல்லு அர்ஜுன் மீண்டும் தனது சமூக வலைதள பக்கத்தில் கவலையுடன் ஒரு தகவலை வெளியிட்டார். முன்னதாக, ஸ்ரீதேஜின் தாய் ரேவதி இறந்த சம்பவத்திற்கு மறுநாள் அல்லு அர்ஜுன் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்ததோடு, நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். இதுமட்டுமல்லாமல், மருத்துவமனையில் இருக்கும் ஸ்ரீதேஜுக்கு தேவையான சிகிச்சை அளிப்பது குறித்து தங்கள் குழு ஆலோசித்து வருகிறோம். கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவளிப்பதாக அல்லு அர்ஜுன் உறுதியளித்துள்ளார். இந்தநிலையில்தான், அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் உரிமையாளர் மீது எதிர்பாராத விதமாக வழக்குகள் தொடரப்பட்டு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அல்லு அர்ஜூன் கைது மூலம் அந்த குடும்பத்திற்கு நிதி உதவி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பதிவு:<

/h3>
இந்த சம்பவம் குறித்து தற்போது அல்லு அர்ஜுன் மீண்டும் ஒருமுறை தனது பதிவை அழகாக வெளியிட்டுள்ளார். அதில், “அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரீதேஜின் உடல்நிலை குறித்து நான் கவலைப்படுகிறேன். வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால், குடும்ப உறுப்பினர்களை இப்போது சந்திக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீதேஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு முன்பு குறிப்பிட்டது போல் நிதி உதவி அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். ஸ்ரீதேஜ் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அதுமட்டுமின்றி, அவர்களது குடும்ப உறுப்பினர்களை விரைவில் சந்திக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ALSO READ: Did you know: இந்தியாவில் 1000 கோடி ஹிட் கொடுத்த முதல் நடிகை இவரா..? பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் மிஸ்..!

அந்தவகையில், அல்லு அர்ஜுனின் நெருங்கிய வட்டாரங்கள் ஸ்ரீதேஜின் மருத்துவ சேவையை முதல் நாளிலிருந்தே கவனித்து மருத்துவமனை கட்டணத்தை முழுவதுமாக செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் இறந்த ரேவதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லு அர்ஜுனிடம் இருந்து நிதியுதவி வழங்கப்படும். தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து ஸ்ரீதேஜ் பூரண குணமடைந்ததும், வழக்கு முடிந்த பிறகு அல்லு அர்ஜுன் கண்டிப்பாக குடும்பத்தினரை சந்திப்பார் எனவும் தெரிவிகிறது. ஒரு பக்கம் இந்த மோசமான சம்பவத்தால் வழக்குகளை சந்தித்து வரும் நிலையிலும் அல்லு அர்ஜுன்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளித்து அவர்களுக்கு ஆதரவாக நிற்பது மனிதநேயத்தை காட்டுகிறது என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Latest News