5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pushpa 2 : ஷாருக்கானை ஓரம் கட்டிய அல்லு அர்ஜுன்.. டாப் வசூலில் புஷ்பா 2

Pushpa 2 Movie Box Office : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுனின் 2 ஆண்டு கடுமையான உழைப்பினால் மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில், அசத்தலான கதைக்களத்துடன் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இந்த 11 நாட்களின் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Pushpa 2 : ஷாருக்கானை ஓரம் கட்டிய அல்லு அர்ஜுன்.. டாப் வசூலில் புஷ்பா 2
புஷ்பா 2 திரைப்படம்
barath-murugan
Barath Murugan | Published: 16 Dec 2024 18:24 PM

டோலிவுட் பிரபல இயக்குநர் சுமார் இயக்கத்திலும் மற்றும் பேமஸ் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி தயாரிப்பிலும் மிகப் பிரம்மாண்ட திரைப்படமாகக் கடந்த டிசம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா என இவர்களின் முன்னணி நடிப்பில் வெளியாகியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 294 கோடியை வசூல் செய்து சாதனை படைத்து. தொடர்ந்து 6 நாட்களில் சுமார் ரூ 1000 கோடியை நெருங்கிய நிலையில், கடந்த டிசம்பர் 11ம் தேதியில் சுமார் 1002 கோடிகளை வசூல் செய்து பெரும் சாதனையைப் படைத்தது.

இதை அடுத்தாக இந்த புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி இன்றோடு 11 நாட்களைக் கடந்த நிலையில், உலகளாவிய வசூலில் சுமார் ரூ 1409 கோடிகளை வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மிகப் பிரம்மாண்ட கதைகளுடன் வெளியான இந்த திரைப்படம் 2024ம் ஆண்டு இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் எனப் பெயரும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:தீவிர சினிமா ரசிகன் டூ எஸ்கே 25… ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்

நடிகை அல்லு அர்ஜுன் உடன் இப்படத்தில் நடிகை ரஷ்மிகா, ஃபகத் பாசில், சுனில், ஜெகபதி பாபு , தனஞ்சயா மற்றும் ராவ் எனப் பலரும் நடித்திருந்தனர். கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்துடன் வெளியான பாகம் 2 திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் வெளியாகி தற்போது 11 நாட்களைக் கடந்த நிலையில், முதல் 10 நாட்களில் சுமார் ரூ 1292 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க:நடிகர் பிரபாஸின் படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா?

இந்நிலையில் இன்று டிசம்பர் 16ம் தேதியில் இதுவரை இந்த திரைப்படம் சுமார் ரூ 1409 கோடிகளை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று டிசம்பர் 15ம் தேதியில் இந்தி சினிமாவில் மட்டும் ரூ 55 கோடிகளை வசூலித்ததாகவும், தெலுங்கில் 16 கோடிகளையும் மற்றும் தமிழில் 3 கோடியும் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் உள்நாட்டுச் சந்தையில் 74% மற்றும் உலகளவில் 70% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதைத் திரைப்படம் தொடர்ந்து வசூலில் நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளியதாகவும் மற்றும் பாகுபலி 2 படத்தின் வசூலை விரைவில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:அல்லு அர்ஜுனை கைது செய்தது நியாயமே இல்லை – நடிகர் சரத்குமார் காட்டம்

Latest News