5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கோலிவுட் சினிமாவில் தீபாவளி ரேஸில் களமிறங்கும் 4 பெரிய படங்கள் – ஹிட் அடிக்கப்போவது யார்?

பெரும்பாலான சமயங்களில் ரஜினி, விஜய், அஜித்துடைய படங்கள் வெளியாகும். இந்த நிலையில் இந்த தீபாவளிக்கு கோலிவுட்டில் 4 முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ரேஸில் எந்த படம் ஹிட் அடிக்கும் என்பது வெளியானபிறகே தெரியும்.

கோலிவுட் சினிமாவில் தீபாவளி ரேஸில் களமிறங்கும் 4 பெரிய படங்கள் – ஹிட் அடிக்கப்போவது யார்?
படங்கள்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Sep 2024 13:38 PM

கோலிவுட் சினிமாவில் தீபாவளி, பொங்கல் என பண்டிகைகளுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். சில நேரங்களில் போட்டி நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைக்கும். பெரும்பாலான சமயங்களில் ரஜினி, விஜய், அஜித்துடைய படங்கள் வெளியாகும். இந்த நிலையில் இந்த தீபாவளிக்கு கோலிவுட்டில் 4 முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ரேஸில் எந்த படம் ஹிட் அடிக்கும் என்பது வெளியானபிறகே தெரியும்.

நடிகர் அஜித், துணிவு படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட நிலையில், இடையில் ஆறு மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. பின்னர் படத்தில் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியது. படம் தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடப்பட்டு வருவதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனை அஜித் ரசிகர்கள் ’தல’ தீபாவளி இந்த வருடம் என்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர். சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

‘சைரன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பிரதர்’. இந்தப் படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர்த்து, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, ‘கேஜிஎஃப்’ புகழ் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. ‘பிரதர்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கவின் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான லிஃப்ட் திரைப்படம் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. அதன் பின், கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது. இதைத்தொடர்ந்து, கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்று இவரின் தரத்தை உயர்த்தியது. ஸ்டார் படத்தைத் தொடர்ந்து கவின் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் பிளடி பெக்கர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது 21-வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. பிற மாநிலங்களில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள், காஷ்மீரி வீரர்கள், ‘விஸ்வரூபம்’ வில்லன் ராகுல் போஸ், புவன் அரோரா எனப் பலரும் நடித்துள்ளனர். தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படமும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News