தீபாவளி ரிலீஸ் படங்கள்.. களமிறங்கும் 4 படைப்புகள்… ஜெயிக்கப்போவது யார்? - Tamil News | Amaran Brother Lucky Baskhar Bloody Beggar 4 movies released for this Diwali festival | TV9 Tamil

தீபாவளி ரிலீஸ் படங்கள்.. களமிறங்கும் 4 படைப்புகள்… ஜெயிக்கப்போவது யார்?

Diwali Movies : தீபாவளி, பொங்கள் என பெரிய பண்டிகைகள் வரும் போது கோலிவுட் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு முக்கிய நடிகர்களின் படங்கள் கோலிவுட்டில் வெளியாகவுள்ளது. அதில் வெல்லப்போவது யார் என்பது படத்தின் வெளியீட்டிற்கு பிறகே தெரியவரும்.

தீபாவளி ரிலீஸ் படங்கள்.. களமிறங்கும் 4 படைப்புகள்... ஜெயிக்கப்போவது யார்?

அமரன், ப்ரதர், லக்கி பாஸ்கர், ப்ளடி பெக்கர்

Updated On: 

28 Oct 2024 17:35 PM

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் 21-வது படமாக அமைந்த இதை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. பிற மாநிலங்களில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள், காஷ்மீரி வீரர்கள், ‘விஸ்வரூபம்’ வில்லன் ராகுல் போஸ், புவன் அரோரா எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சாய் பல்லவி மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கு கடந்த சில காலங்களாக படங்கள் பெரிய அளவில் வெற்றியை தேடித் தரவில்லை. இவரது நடிப்பில் குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் வெளிவந்த இறைவன், சைரன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் ராஜேஷ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ஜெயம் ரவி. ’ப்ரதர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகை ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ஜெயம் ரவியியுடன் இணைந்து நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘வாத்தி’ படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் வெங்கி அட்லுரி. இதனைத் தொடர்ந்து இவர் துல்கர் சல்மானை வைத்து தற்போது ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பான் இந்தியன் படமாக உருவாகும் இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.

இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சீரியல்கள் மற்றும்  பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர்  நடிகர் கவின். லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவின் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சினிமாவில் காலடிவைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து மிக குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் கவின்.

தற்போது இவர் ‘ப்ளடி பெக்கர்’ படத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்குநர் சிவபாலன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கவினுடன் இணைந்து, ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணு குமார், அர்ஷத், பிரியதர்ஷினி ராஜ்குமார், மிஸ் சலீமா, அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

நடிகை சினேகாவிற்கு பிடித்த நடிகர் இவர்தான்!
மாஸ் ஹீரோதான் இந்தப் பையன்... யார் தெரியுதா?
தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான முக்கிய விஷயங்கள்!
சகோதரியிடம் உடன்பிறப்புகள் கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயங்கள்!