Major Mukund : ‘அமரன்’ படம் உருவாக காரணமான மேஜர் முகுந்த்.. யார் இந்த வீரர்? என்ன நடந்தது?

1983-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தார் முகுந்த். சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடிந்தவர், தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரியில் முதுகலையில் இதழியல் பட்டம் பெற்றவர். உறவினர்கள் சிலர் ராணுவத்தில் இருப்பதால் தானும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் ராணுவ அதிகாரியானார்.

Major Mukund :  அமரன் படம் உருவாக காரணமான மேஜர் முகுந்த்.. யார் இந்த வீரர்? என்ன நடந்தது?

மேஜர் முகுந்த்

Updated On: 

24 Oct 2024 17:07 PM

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் உருவாக காரணமாக இருந்த மேஜர் முகுந்த் யார், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து பார்க்கலாம். நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது 21-வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. பிற மாநிலங்களில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள், காஷ்மீரி வீரர்கள், ‘விஸ்வரூபம்’ வில்லன் ராகுல் போஸ், புவன் அரோரா எனப் பலரும் நடித்துள்ளனர்.

தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தீபாவளி ரிலீஸ்

‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்துக்கு, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியானது.

தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்திய நாட்டுக்காக சிறப்பான சேவையை செய்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தார் முகுந்த்.

முகுந்த் வாழ்க்கை வரலாறு

கடந்த 1983-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தார்தான் மேஜர் முகுந்த். சென்னையில் முகுந்த் தனது பள்ளிப்படிப்பை முடிந்தார். அதனைத் தொடர்ந்து தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரியில் தனது முதுகலையில் இதழியல் பட்டத்தைப் பெற்றார்.  தனது உறவினர்கள் ராணுவத்தில் இருப்பதால் தானும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் ராணுவத்தில் சேர்ந்து ராணுவ அதிகாரியாக மாறினார்.

முகுந்தின் அப்பா வரதராஜன் தனது சிறுவயதில் இந்திய விமானப்படையில் சேர ஆசைப்பட்டார். அவரது உறவினர்கள் பலர் IAFல் சேர்ந்தனர். ஆனால், வரதராஜன் வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் வரதராஜனின் பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால், தனது ஒரே மகன் முகுந்த் ஆர்மியில் சேர விரும்புவதாக தெரிவித்த போது தந்தை  வரதராஜன் தடை சொல்லவே இல்லை. ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளில் மேஜராக மாறிய முகுந்த் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி வீரமரணம் அடைந்தார்.

அசோக் சக்ரா விருது

மேஜர் முகுந்த் தனது 31-வது வயதில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக தனது இன்னுயிர் தந்து நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அந்த விருதை மறைந்த முகுந்த்தின் மனைவி இந்து முகுந்த் பெற்றுக்கொண்டார்.

Also read… இணையத்தைக் கலக்கும் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் முதல் விமர்சனம்!

முன்னதாக முகுந்தின் தனதை வரதராஜான் பேட்டி ஒன்றில் பேசியதாவது, என் மகன் மேஜர் முகுந்த் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்பவரை திருமணம் செய்து தனது பெண் குழந்தையுடன் அதிகபட்சமாக 6 மாதங்கள் தான் செலவிட்டு இருப்பார். முழுக்க முழுக்க இந்திய நாட்டின் மீதே ஆர்வம் கொண்டிருந்தான் என அவரது தந்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு ராணுவ வீரனின் கதையில் தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

அமரன் படம்

அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அமரன் படத்தை ராணுவ உயரதிகாரிகள் சிலரிடம் படக்குழு போட்டு காண்பித்ததாகவும், அது அவர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மேஜர் முகுந்த் வரதராஜனோடு பணியாற்றியவர்களுக்கும் படம் போட்டு காண்பித்ததாகவும், அதற்கு அவர்கள் படத்தில் சின்ன சின்ன குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் படத்தை மிக அருமையாக இயக்குநர் உருவாகியிருக்கிறார். சிவகார்த்திகேயனும் அபாரமாக நடித்திருக்கிறார் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!